இந்திய வங்கிகள் தனது நிதி தேவையை பூர்த்தி செய்ய பல வகையில் நிதி திரட்டுவது வழக்கமான ஒரு விஷயம், ஆனால் எப்போதும் இல்லாத வகையில் சந்தையில் இருந்து வங்கிகள் சுமார் 9 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை நிதி திரட்டியுள்ளது. வங்கிகள் அதிகப்படியான நிதியை திரட்ட முக்கியமான காரணம் சந்தையில் கடனுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் இதேவேளையில மக்கள் செய்யும் டெபாசிட் குறைந்துள்ளது.
இந்த நிதி பற்றாக்குறையை சமாளிக்கவே வங்கிகள் மாற்று வழியில் அதிகப்படியான நிதி திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியிடும் தரவுகளின்படி, ஜூலை 26-ஆம் தேதி நிலவரப்படி வங்கிகள் வாங்கிய கடன் தொகை 9.32 லட்சம் கோடியாக உள்ளது. இது ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது 20% அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் கடன் அளவின் சராசரி தொகை 7.99 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் 45% அதிகம் என்று ஆர்பிஐ தரவு தெரிவிக்கிறது.

கடன் மற்றும் டெபாசிட் ஆகிய இரண்டிற்கும் இடையே இடைவெளி உள்ளது. ஆனால் வளர்ச்சியின் அடிப்படையில் அது குறுகத் தொடங்கியுள்ளது. ஏனெனில் வங்கிகள் அளிக்கும் கடன் வர்த்தகம் 14 சதவீத அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது, அதே நேரத்தில் டெபாசிட் பெறும் வளர்ச்சி சுமார் 11 சதவீதமாக குறைந்துள்ளது.
2023 முதல் 2024-ஆம் நிதியாண்டு வரை, டெபாசிட் செய்யப்பட்ட தொகை சுமார் 23 லட்சம் கோடி ரூபாயாகவும், கடன் கொடுக்கப்பட்ட தொகை சுமார் 22 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. குறிப்பாக கடன் விகிதம் டெபாசிட் விகிதத்தில் 75 முதல் 80 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப வங்கிகள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று யூனியன் பேங்கின் தலைமை பொருளாதார ஆலோசகர் கனிக்கா பாஸ்ரிச்சா கூறினார்.
ஜூலை 26-ஆம் தேதி நிலவரப்படி, வங்கி கடன் வளர்ச்சி கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 15.1 சதவீதமாகவும், டெபாசிட் வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாகவும் உள்ளது என்று ஆர்பிஐ தரவு தெரிவிக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு பொருளாதாரம் மீண்டு வந்ததால், ஏப்ரல் 2022-ஆம் ஆண்டு முதல் வங்கி கடன் வளர்ச்சி தொடர்ந்து டெபாசிட் வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது.
இந்திய ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் இயக்குனர் சௌமியஜித் நீயோகி கூறுகையில், சமீபத்திய டெபாசிட் அதிகரிப்பு ஊக்கமளிக்கக்கூடியதாக இருந்தாலும், வங்கிகளின் கடன் விகிதத்தை குறைக்க அதிக நேரம் எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்த பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்றால், பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாக மக்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதை விட, பங்குச் சந்தை, தங்கம் போன்ற பிற இடங்களில் அதிகம் முதலீடு செய்கின்றனர். இதனால் வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட் குறைந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications