அக்டோபர் மாதத்தின் மத்தியில் இருக்கும் வேளையில் இந்த மாதம் மீதமுள்ள 12 நாட்களில் வங்கி தொடர்பான பணிகள் இருந்தால், முன்கூட்டியே திட்டமிட வேண்டிய கட்டாயம் உள்ளது. காரணம் அக்டோபர் மாதத்தில் அடுத்த 12 நாட்களில் சுமார் 8 நாட்கள் வங்கிகள் விடுமுறை.
பொதுவாக வங்கிகள் விடுமுறை எனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தியாவில் இருக்கும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் அடுத்த 12 நாட்களில் பொது விடுமுறை, பண்டிகை போன்ற காரணங்களுக்காக மூடப்பட உள்ளது.

எனவே எந்த நாளில் வங்கி விடுமுறை என்பதைத் தெரிந்துகொண்டு வங்கி சார்ந்த பணிகளைத் திட்டமிடுங்கள். டிஜிட்டல் வங்கி சேவையும், யூபிஐ ஆகியவை இருக்கும் காரணத்தால் மக்கள் தற்போது வங்கிகளுக்குச் செல்வதற்கான அவசியம் குறைந்தாலும் பல காரணங்களுக்காக வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
உதாரணமாக வங்கிக் கடன், ஹோம் லோன், பிஸ்னஸ் லோன், பெரும் தொகைக்கான டெபாசிட், வங்கி கணக்கை திறப்பது, மூடுவது எனப் பல பணிகளுக்காக வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள நாட்களில் எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதைத் தெரிந்துகொண்டு வங்கி பணிகளைத் திட்டமிடுங்கள்.
அக்டோபர் 2023 இல் இன்னும் எட்டு வங்கி விடுமுறைகள் உள்ளன. அக்டோபர் மாதத்திற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, துர்கா பூஜை, தசரா மற்றும் பல்வேறு பண்டிகைகள் மற்றும் இதர நிகழ்வுகளுக்காக வங்கிகளும், வங்கி கிளைகளும் மூடப்படும்.
வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் வங்கி விடுமுறைகள் அமையும். இந்தக் காலகட்டத்தில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டாலும், இண்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் இயந்திரங்கள் ஆகியவற்றின் மூலம் வங்கி செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
அக்டோபர் மாதத்தில் அடுத்த 12 நாட்களில் வங்கி விடுமுறைகளின் முழு விபரம்:
1) அக்டோபர் 21 (சனிக்கிழமை): துர்கா பூஜை (மகா சப்தமி) - திரிபுரா, அசாம், மணிப்பூர் மற்றும் வங்காளத்தில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
2) அக்டோபர் 23 (திங்கட்கிழமை): மகாநவமி, ஆயுதபூஜை, துர்கா பூஜை, விஜய தசமி - திரிபுரா, கர்நாடகா, ஒரிசா, தமிழ்நாடு, அசாம், ஆந்திரா, கான்பூர், கேரளா, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
3) அக்டோபர் 24 (செவ்வாய்கிழமை): தசரா (விஜயதசமி), துர்கா பூஜை - ஆந்திரா மற்றும் மணிப்பூர் தவிர அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
4) அக்டோபர் 25 (புதன்கிழமை): துர்கா பூஜை (தசைன்) - சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
5) அக்டோபர் 26 (வியாழன்): துர்கா பூஜை (தாசைன்)/இணைப்பு நாள்- சிக்கிம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
6) அக்டோபர் 27 (வெள்ளிக்கிழமை): துர்கா பூஜை (தசைன்) - சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
7) அக்டோபர் 28 (சனிக்கிழமை): லட்சுமி பூஜை - மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
8) அக்டோபர் 31 (செவ்வாய்கிழமை): சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் - குஜராத்தில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
இதே தொடர்ந்து வார இறுதி நாட்கள் விடுமுறை பிரிவில்
1) அக்டோபர் 22: ஞாயிறு விடுமுறை
2) அக்டோபர் 29: ஞாயிறு விடுமுறை
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications