இந்திய வர்த்தக சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் உயிர்நாடியாக இருக்கும் வங்கிகள் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை காரணமாக முடப்பட உள்ளது. இதனால் மக்கள் வங்கி பணிகளை ஒத்திவைக்க வேண்டும் அல்லது மாற்று வழிகளில் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் 7 சங்கங்கள் அடங்கிய தலையாக வங்கி ஊழியர்கள் அமைப்பாக திகழும் United Forum Of Bank Unions அமைப்பு 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி நாடு தழுவிய போராடத்தை அறிவித்துள்ளது.

இதனால் நாளை வெள்ளிக்கிழமை இயங்காது, இதை தொடர்ந்து சனிக்கிழமை 2வது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை வார பொது விடுமுறை, திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை தென்னிந்தியாவில் 5 மாநிலத்திலும், மகாராஷ்டிரா, கொல்கத்தா ஆகியவற்றில் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால் இதர சில மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.
வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக் குறித்து இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 11ஆம் தேதி வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக வங்கிகள் செயல்படாது என்றாலும், மக்களுக்கு தேவையான அடிப்படை சேவைகளை நெட் பேங்கிங், ஏடிஎம், யூபிஐ, கஸ்டமர் சர்வீஸ் பாயின்ட் வாயிலாக பெற முடியும் என தெரிவித்துள்ளது.
UFBU அமைப்பு நாளை மட்டும் அல்லாமல் செப்டம்பர் மாதம் 28,29, 30 ஆகிய தேதிகளிலு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இவ்விரு போராட்டத்திலும் வங்கி ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றப்படவில்லை என்றால் அக்டோபர் 26ஆம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர்கள் அமைப்பான வங்கி UFBU அமைப்பு 4 முக்கியமான கோரிக்கள் முன்வைத்து இந்த 2 கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது.
1. வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், அதாவது வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
2. வங்கி ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையில் உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சத்தை தவிரக்க வேண்டும்
3.வங்கி ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை தொடர்பான மாற்றங்களை ஆலோசனை செய்யப்பட்டு அதன்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
4. மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
