வங்கி கணக்கில் மினிமம் பேலென்ஸ் இல்லை என்றால் வங்கிகள் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து அபராத தொகை எடுத்து வருகிறது. இது சாமானிய மக்களை அதிகம் பாதித்து வரும் நிலையிலும், வங்கிகள் எவ்விதமான தயக்கமும் இல்லாமல் அபராத கட்டணத்தை வசூலித்து வருகிறது.
இதேபோல் இலவச ஏடிஎம் பயன்பாட்டு எண்ணிக்கை முடிந்து செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் கட்டணத்தை வசூலித்து வருகிறது. ஆனால் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாத போது வாடிக்கையாளர்கள் சேவைப்பெற முடியாமல் போனாலும் எவ்விதமான அபராதமும் விதிக்கப்படுவது இல்லை.
இதைத் தான் ரிசர்வ் வங்கி தற்போது கையில் எடுத்துள்ளது.
ஏடிஎம் இயந்திரங்கள்
வங்கி மற்றும் வொயிட் லேபிள் ஏடிஎம் ஆப்ரேட்டர்ஸ்-களுக்கு ரிசர்வ் வங்கி 10 மணிநேரத்திற்கும் அதிகமாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கப் புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள்
இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிப்பது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியம் அளிக்கக் கூடாது என்பதை ஏடிஎம் சேவையில் முதன்மைப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டீஸ்
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டீஸ்-ல், வங்கி மற்றம் வொயிட் லேபிள் ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் உள்ளது என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கும் சிஸ்டத்தைப் பலப்படுத்த வேண்டும். இதுமட்டும் அல்லாமல் பணமில்லா ஏடிஎம் இயந்திரத்தில் உரிய காலகட்டத்திற்குள் பணத்தை நிரப்ப வேண்டும்.
கட்டாயம் அபராதம் விதிப்பு
குறித்த நேரத்திற்குள் ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பாத பட்சத்தில் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
10000 ரூபாய் அபராதம்
மேலும் ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டீஸ்-ல், எந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 10 மணிநேரத்திற்கு அதிகமாகப் பணம் இல்லாமல் இருந்தால் மாதம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது வொயிட் லேபிள் ஏடிஎம் இயந்திரத்திற்குத் தத்தம் ஏடிஎம் இயந்திரத்திற்கு எந்த வங்கி பணம் செலுத்த வேண்டுமோ அந்த வங்கி மீது அபராதம் விதிக்கப்படும்.
அக்டோபர் 1 முதல் நடைமுறை
இப்புதிய கட்டுப்பாடுகள், அபராதங்கள் அனைத்தும் வருகிற அக்டோபர் 1, 2021 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கண்காணிப்பு
பல மாதங்களாகச் செய்யப்பட்டு வரும் கண்காணிப்பில் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாத காரணத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை பற்றி உங்கள் கருத்து என்ன..?
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications