இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஏப்ரல் மாதத்தில் வணிக வங்கிகள் வழங்கிய தங்க கடன் ரூ.2.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 119.6 சதவீதம் அதிகமாகும். 2024 ஏப்ரல் மாதத்தில் வணிக வங்கிகள் ரூ.1.02 லட்சம் கோடிக்கு தங்க கடன்களை வழங்கி இருந்தன. 2024 ஏப்ரலில் தங்க கடன் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது.
தங்க விலை
2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் தங்க கடன் 6.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தங்க விலை உயர்ந்து வருவதால் இந்த வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.71,423ஆக இருந்தது. 2025 ஏப்ரலில் 31.6 சதவீதம உயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.93,983ஆக என இருந்தது இந்திய தங்கம் மற்றும் நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், சமீபத்திய ஆண்டுகளில் சராசரி தங்க கடன் அளவு ரூ.60,000-70,000ஆக இருந்த நிலையில், ரூ.1.1 லட்சம் -ரூ.1.20 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே அளவு தங்கம் ஆனால் அதிக கடன் கிடைக்கிறது. தங்கத்தின் மதிப்பில் கடன் விகிதம் 75 சதவீதமாக வரையறறுக்கப்பட்டுள்ளது. அதாவது தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75 சதவீதம் அளவுக்கே வங்கிகள் கடன் வழங்க முடியும்.
விவசாய கடன்
கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் விவசாயம் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு வழங்கிய கடன் வளர்ச்சி 19.8 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக குறைந்துள்ளது.தொழில்துறைக்கு வழங்கிய கடன் வளர்ச்சி 6.9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.சேவை துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி 19.5 சதவீதத்திலிருந்து 11.2 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் வளர்ச்சி 15.3 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்திய ரிசர்வ வங்கியின் புள்ளிவிவரத்தின்படி, 2025 16ம் தேதி நிலவரப்படி, வங்கிகளின் மொத்த கடன் வளர்ச்சி 9.8 சதவீதமாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் வங்கிகளின் வழங்கிய மொத்த கடன் 9.9 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. மே 2ம் தேதியுடன் முடிவடைந்த பதினைந்து தினங்களில் இது 9.9 சதவீதமாக இருந்தது. வங்கிகள் திரட்டிய டெபாசிட் வளர்ச்சி 10 சதவீதமாக நிலையாக இருந்தது.
More From GoodReturns

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications