விஜய் விட்டல் மல்லையா பிரபல இந்திய தொழிலதிபரும், முன்னாள் அரசியல்வாதியும், இந்தியாவிலிருந்து தப்பியோடியவரும் ஆவார். விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக இருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து, நெருக்கடி அதிகமானதால், விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். இந்தியாவில் நிதிக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இங்கிலாந்தில் இருந்து இவரைத் திரும்பவும் இந்தியா கொண்டு வர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மல்லையா, தான் பெற்ற அரசுப்பணத்தை 100 சதவீதம் திருப்பி தந்து விடுவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துகளை விற்று வந்த ரூ.14,000 கோடியை அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளிடம் திரும்ப தரப்பட்டிருக்கிறது என்று பேசியிருந்தார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன், வட்டியுடன் சேர்த்து ரூ.6 ஆயிரத்து 203 கோடி என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் அதற்கு மாறாக என்னிடம் இருந்து ரூ.14 ஆயிரத்து 131 கோடி வசூலித்தும் நான் இன்னும் பொருளாதார குற்றவாளியாகவே உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த டிசம்பர் 22ம் தேதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய் மல்லையா, நான் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனைப் போல் 2 மடங்குக்கு அதாவது ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமான தொகையை வங்கிகள் எடுத்துக் கொண்டுள்ளன. இதற்கு சட்டரீதியான நியாயமான காரணங்களை ED மற்றும் வங்கிகள் சொல்லாவிட்டால், நிவாரணம் கோருவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நான் நிவாரணம் கோருவேன்" என்று விஜய் மல்லையாவும் தெரிவித்தார்.
மேலும், நான் ஒரு ரூபாய் கூட கடன் பெறவில்லை. திருடவில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவாதம் அளித்தவன் என்ற முறையில், என் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார். யாராவது முன்வந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா? இழிவுபடுத்தப்பட்ட என்னை ஆதரிக்க தைரியம் தேவை எனக்கூறி இருந்தார்.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொழில் அதிபர் விஜய் மல்லையா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. விஜய் மல்லையா தாக்கல் செய்த அந்த மனுவில், தான் வாங்கிய மொத்த கடன் ரூ.6000 கோடி என்றும், ஆனால் வங்கிகள் தன்னிடமிருந்து பல மடங்கு, அதாவது 14 ஆயிரம் கோடியை மீட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கடனை இரு மடங்குக்கு மேல் வசூல் செய்த பின்னரும், தன்னை ஒரு பொருளாதார குற்றவாளி என்று கூறுவதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். தன்னுடைய கடனை திருப்பி வசூலித்திவிட்டதாக வங்கிகள் சார்பில் கூறப்பட்டது. எனினும் கடன் வசூலிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து தெளிவான விளக்கம் வேண்டும் என விஜய் மல்லையா மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில் மல்லையா சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ”கடன் மீட்பு தீர்ப்பாயம் (DRT) ரூ.6.200 கோடியைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவரின் சொத்துக்களை விற்று ரூ.14,000 கோடியை வங்கி வசூலித்துள்ளது. முன்னதாக, கடன் வசூல் அதிகாரி ரூ.10,200 கோடி வரை மல்லையாவிடம் வசூலுளித்துள்ளார். எனவே, வசூலிக்கப்பட்ட கடன் தொகை குறித்த அறிக்கையை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். தவிர, மக்களவையில் மல்லையாவை ஒரு பொருளாதார குற்றவாளி எனவும் கூறுகின்றனர் என்று மல்லையா தரப்பு வாதம் வைத்தது. மல்லையாவின் மனுவின் அடிப்படையில், நீதிபதி ஆர்.தேவதாஸ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, வங்கிகள் மற்றும் கடன் வசூல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வங்கிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications