சென்னை: இந்த சனிக்கிழமை, ஆகஸ்ட் 24, 2024 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படவுள்ளன. சில மாநிலங்களில், கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு, திங்கட்கிழமை, ஆகஸ்ட் 26 அன்று வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் விடுமுறை உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு முக்கிய வங்கி பணிகள் இருப்பின் நாளை முடித்துக்கொள்வது உத்தமம்.
ஆகஸ்ட் 24 வங்கி விடுமுறை: இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால், அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கிகள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் ஞாயிறுகள், தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகள் உட்பட மூடப்படும்.

ஆகஸ்ட் 25 வங்கி விடுமுறை: ஞாயிறு என்பதால் வங்கிகள் வழக்கம் போது நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 26 வங்கி விடுமுறை: நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்குப் பிறகு வருகின்ற ஜன்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் நிமித்தமாக சில மாநிலங்களில் வங்கிகள் திங்கட்கிழமை ஆகஸ்ட் 26 அன்று மூடப்பட்டுள்ளன.
இதன் படி குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகண்ட், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேகாலயா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல் திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், கேரளா, நாகாலாந்து, டெல்லி, கோவா ஆகிய மாநிலங்களில் விடுமுறை இல்லை.
இதேவேளையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள 3 நாட்களிலும் பெரும்பாலான வங்கிகளால் வழங்கப்படும் இணைய வங்கி, வாட்ஸ்ஆப் வங்கி, எஸ்எம்எஸ் வங்கி, மொபைல் வங்கி போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகளைத் தனிநபர்களுக்குத் தடையில்லாமல் பயன்படுத்தலாம்.
பெரும்பாலான நிதி மற்றும் நிதி சேவைகளை நெட் வங்கி மற்றும் மொபைல் வங்கி மூலம் செய்ய முடியும். எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிதி தேவை இருப்பின் ஏடிஎம் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications