விரைவில் ஈஎம்ஐ தொகை உயரும்.. ரிசர்வ் வங்கி வந்த புதிய நெருக்கடி..!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைக்கவும், கோவிட் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பைக் குறைக்கவும் தனது நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான வட்டி மாற்றத்தையும் அறிவிக்காமல் தொடர்ந்து பழைய வட்டி விகிதத்தையே அறிவித்தது.

ஆனால் இது தொடர்ந்து நீடிக்காது என்பது தான் இப்போதைய பிரச்சனை, ஏற்கனவே கணிக்கப்பட்டதை விடவும் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டியே கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.

 இந்தியப் பொருளாதார வளர்ச்சி

இந்தியப் பொருளாதார வளர்ச்சி

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பிரச்சனையாக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனாலும் பல்வேறு காரணத்தால் நுகர்வோர் பொருட்களின் விலைவாசி பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இதைச் சமாளிக்கக் கட்டாயம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

 விலைவாசி பிரச்சனை

விலைவாசி பிரச்சனை


விலைவாசி பிரச்சனையைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் 1 சதவீதம் வரையில் தனது வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட 0.75 சதவீத வட்டி உயர்வுக்குப் பின்பு, சேவை மற்றும் கன்ஸ்யூமர் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் இன்புட் காஸ்ட் 15 முதல் 21 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசியைக் குறைக்க வட்டி உயர்வை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

 நுகர்வோர் பணவீக்கம்

நுகர்வோர் பணவீக்கம்

மேலும் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.5 சதவீதத்தில் இருந்து நவம்பர் மாதம் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கணிக்கப்பட்ட அளவான 5.1 சதவீதத்தை விட குறைவாக உள்ளது, இந்த வித்தியாசத்திற்கு உணவு மற்றும் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம் தான் முக்கியக் காரணம். ஆனால் கோர் பணவீக்க அளவீடு 5.9 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 கலால் வரிக் குறைப்பு

கலால் வரிக் குறைப்பு

இதேபோல் பர்சனல் கேர், ஆடை தயாரிப்பு, பொழுதுபோக்கு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் மற்றும் சேவை ஆகியவற்றின் உற்பத்தி விலையில் ஏற்பட்ட உயர்வு மத்திய அரசு அறிவித்த கலால் வரிக் குறைப்பின் தாக்கத்தையும் முழுமையாக விழுங்கியுள்ளது.

 40 வருட உச்சம்

40 வருட உச்சம்

கடந்த சில காலாண்டுகளாக உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கத்தின் அளவு 40 வருட உச்சத்தில் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை அதிகளவில் பாதித்து வருகிறது.

 1 சதவீத உயர்வு

1 சதவீத உயர்வு

பணவீக்கத்தின் உயர்வால் விலைவாசி அதிகமாக இருக்கும் போது நாட்டின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கும். இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 1 சதவீதம் அல்லது 100 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்த வேண்டி உள்ளது.

 ஈஎம்ஐ தொகை

ஈஎம்ஐ தொகை

ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தினால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் வட்டியை உயர்த்தும். இதன் மூலம் தானாக வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் என அனைத்து கடன்களின் வட்டி விகிதமும் உயரும். இதனால் ஈஎம்ஐ தொகையும் அதிகரிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+