நவம்பர் 29ஆம் தேதி துவங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வங்கியியல் விதிகள் மசோதா 2021 பெயரில் புதிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த மசோதாவில் மோடி தலைமையிலான மத்திய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு இருந்த பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கல் திட்டத்தைச் செயல்படுத்த முக்கியமான திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டதன் மூலம் வங்கிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கி தனியார்மயமாக்கல் குறித்து முக்கிய முடிவை இந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு எடுக்க உள்ளது.
புதிய மசோதா
மத்திய அரசு நவம்பர் 29ஆம் தேதி Banking Laws (Amendment) Bill, 2021 மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு இருப்பு அளவு 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகக் குறைப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
குளிர்காலக் கூட்டத்தொடர்
இது குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறும் பட்சத்தில் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளிலும் மத்திய அரசு தனது பங்கு இருப்பைக் குறைக்க முடியும். இந்தப் பங்குகளை மத்திய அரசு பிற அரசு அமைப்பு, அரசு முதலீடுகள் அல்லது தனியார் நிறுவனங்களுக்குக் கூட விற்பனை செய்து முதலீட்டை ஈர்க்க முடியும்.
2 பொதுத்துறை வங்கிகள்
மேலும் பட்ஜெட் 2021-22 அறிவிப்பில் மத்திய அரசு 2 பொதுத்துறை வங்கிகளை முழுமையாகத் தனியார்மயமாக்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. எந்த வங்கியை தனியார் மயமாக்குவது என்பது குறித்து நித்தி அயோக் செய்த பரிந்துரையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றைக் குறிப்பிட்டு இருந்தது.
முக்கிய முடிவு
தற்போது மத்திய அரசு சமர்ப்பித்துள்ள Banking Laws (Amendment) Bill, 2021 மசோதாவில் அரசு பொதுத்துறை வங்கிகளில் வைத்திருக்கும் அதிகப்படியான பங்கு இருப்பு அளவை 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகக் குறைக்கப்படத் திட்டமிட்டு இருப்பதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரு வங்கிகளை மேலும் தனியார்மயமாக்க வேண்டுமா என்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
ஏர் இந்தியா
மத்திய அரசு இதேபோலத் தான் ஏர் இந்தியா நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வைத்திருக்க முடிவு செய்து அதன் பின் இதில் தோல்வி அடைந்த காரணத்தால் மொத்த ஏர் இந்தியாவையும் விற்பனை செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications