அடுத்த இரண்டு நாட்கள் வங்கி விடுமுறையா.. தமிழகத்தில் என்ன நிலவரம்..!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், வங்கிகளிலும் பல விதமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிகப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் வாடிக்கையாளார்களுக்கான வங்கி நேரத்தினை குறைக்க, நண்பகல் 12 மணி வரை செயல்படவும், வங்கி கிளையை மதியம் 1 மணிக்கே மூடவும் உத்தரவிட வேண்டும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசுக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பொது செயலாளர் எழுதிய கடிதத்தில், கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் அடுத்து வரும் 24ம் தேதி வரையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

50% பணியாளர்கள் மட்டும் அனுமதி

50% பணியாளர்கள் மட்டும் அனுமதி

அரசு அலுவலககங்களிலும் 50% பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி வங்கிகளில் தற்போது 50% பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஆனால் வேலை நேரம் குறைக்கப்படவில்லை. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நேரத்தை குறைக்க அனுமதிக்க வேண்டும்

நேரத்தை குறைக்க அனுமதிக்க வேண்டும்

ஆனால் இந்த காலகட்டத்தில் வங்கிகளுக்கு மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றது. இது தேவையில்லாத ஒன்று, ஆக வங்கிகளில் 50% பணியாளர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரம் முதல் மற்றும் மூன்றாவது சனிகிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். வங்கி அதிகரிகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அடுத்த இரு நாட்கள் விடுமுறை

அடுத்த இரு நாட்கள் விடுமுறை

இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் பலவித கட்டுப்பாடுகள் நிலவி வருவதால், ஏற்கனவே வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை. இந்த நிலையில் நாளையும் நாளை மறு நாளும் வங்கிகளுக்குக்கு விடுமுறை தினமாக உள்ளது. 13, மே 2021 வியாழக்கிழமை - ரம்ஜான் ஐடி / ஈத்-உல்- ஃபிதார் * விடுமுறை தினமாக உள்ளது. எனினும் இந்த நாளில் தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படவில்லை. மற்ற சில மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எத்தனை நாள் விடுமுறை

தமிழகத்தில் எத்தனை நாள் விடுமுறை

இதே 14, மே 2021 வெள்ளிக்கிழமை - பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி/ ரம்ஜான் EId/ பசவ ஜெயந்தி/ அட்சய திருதி அன்று தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே மீண்டும் வங்கிகள் செயல்படும். அதன் பிறகு 16, மே 2021 ஞாயிற்றுகிழமை.
22, மே 2021, நான்காவது சனிக்கிழமை
23, மே 2021 ஞாயிற்றுக்கிழமை
30, மே 2021 ஞாயிற்றுக்கிழமை

திட்டமிட்டு செயல்படுங்கள்

திட்டமிட்டு செயல்படுங்கள்

ஏற்கனவே கொரோனாவின் காரணமாக வங்கிகளில் பல கட்டுப்பாடுகள் நிலவி வருவதால், மக்கள் முன் கூட்டியே வங்கி வேலைகளை திட்டமிடலாம். வங்கிக்கு செல்வதை தவிர்த்து முடிந்த அளவு, டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தலாம். அப்படியே வங்கிகளுக்கு சென்றாலும், மாஸ்க், சமூக இடைவெளி என்பதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+