இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் மக்களும் வர்த்தகமும் இயல்பு நிலைக்குத் திரும்பத் துவங்கியுள்ளது. ஆனால் அனைத்து அரசு அலுவலங்கள், வங்கிகள் அனைத்தும் முழுமையாக இயங்க துவங்கியுள்ளது.
கொரோனா காலத்தில் வங்கிகள் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்தும், வேலை நேரத்தையும் குறைந்து இயங்கி வந்த வங்கிகள் தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைப்புக் காரணமாகத் தற்போது முழுமையாக இயங்கி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் வங்கிகள் அடுத்த 5 நாட்களுக்குப் பல்வேறு காரணத்திற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி விடுமுறை நாட்கள்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்கள் அடிப்படையில் ஜூலை மாதம் நாட்டின் சில மாநிலங்களில் மட்டும் சுமார் 15 நாட்கள் வங்கிகள் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் தத்தம் பகுதி மக்கள் வங்கி சேவைகளைத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
தொடர் வங்கி விடுமுறை
உதாரணமாக டெஹ்ராடூன்-ல் ஜூலை 16ஆம் தேதி Harela Puja ஆகியவற்றின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஒரு நாள் இடைவெளியில், ஞாயிற்றுக்கிழமை, இதன் பின்பு ஜூலை 21ல் பக்ரீத் எனத் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மொத்த விடுமுறை விபரம்
ஜூலை 16 - Harela Puja (டெஹ்ராடூன்)
ஜூலை 17 - Kharchi Puja - (அகர்தலா, ஷில்லாங்)
ஜூலை 18 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 19 - Thungkar Tshechu of Guru Rimpochee - (கேங்டாக்)
ஜூலை 20: Eid al Adha (ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்)
ஜூலை 21: பக்ரித் பண்டிகை (ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றைத் தவிர அனைத்து மாநிலத்திலும் விடுமுறை)
தமிழ்நாடு விடுமுறை
பிற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை ஏதும் இல்லை, ஜூலை 21ஆம் தேதி பக்ரித் பண்டிகை நாளில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தவிர ஜூலை மாதத்தில் அனைத்து வேலை நாட்களிலும் வங்கிகள் முழுமையாக இயங்கும்.


Click it and Unblock the Notifications