புத்தாண்டு பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை தொடங்கி பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் மூடப்படவுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி தான் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அதன்படி டிசம்பர் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி டிசம்பர் 29-ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை வரை பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
டிசம்பர் 2024-ஆம் ஆண்டின் வங்கி விடுமுறை நாட்கள்:

24 டிசம்பர் (செவ்வாய்கிழமை): கிறிஸ்துமஸ் ஈவ் முன்னிட்டு கோஹிமா, ஐஸ்வால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
25 டிசம்பர் (புதன்கிழமை): தேசிய விடுமுறையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
26 டிசம்பர் (வியாழன்): சில மாநிலங்களில் 26-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஐஸ்வால், கோஹிமா மற்றும் ஷில்லாங் போன்ற பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
27 டிசம்பர் (வெள்ளிக்கிழமை): கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
28 டிசம்பர் (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
29 டிசம்பர் (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
பொதுவாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்குமான விடுமுறை நாட்களை தெரிவிக்கின்றது. அதன்படி தான் நாட்டில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வழங்கப்படுகிறது. அப்படி விடுமுறை நாட்கள் வழங்கப்பட்டாலும் மக்கள் தொடர்ந்து தங்களுடைய நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தி பலன் பெற முடியும்.
வெளியூர்களில் இருந்து வங்கிகளுக்கு வரும் நபர்கள் வங்கி விடுமுறை நாட்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். வங்கி விடுமுறை நாட்களில் நகை அடமானம் வைப்பது, நகை மீட்பது போன்ற விஷயங்களை தவிர்த்து பல்வேறு பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாக செய்யலாம். அதோடு வங்கிக்குச் சென்று செய்யக்கூடிய சில வேலைகள் இருக்கும். இது போன்ற வேலைகளை வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் தேவையில்லாத அலைச்சல் ஏற்படலாம். எனவே தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க முன் கூட்டியே விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications