இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வருகிறது. திருவிழாக்கள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் மார்ச் மாதத்தில் 14 நாட்களுக்கு மூடப்படும்.
இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கிளைகளும் மூடப்பட்டிருக்கும்.
பண்டிகை விடுமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கிய பட்டியலைப் பின்பற்றுகின்றன.

பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநிலம் அல்லது பிராந்தியத்தில் உள்ள வங்கிகளை மட்டுமே பாதிக்கும். இருப்பினும், வங்கி விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பெற முடியும்.
மார்ச் 2024ல் வங்கி விடுமுறை நாட்கள்-
மார்ச் 1 (வெள்ளிக்கிழமை): சாப்சார் குட் (ஐஸ்வால்)
மார்ச் 3: ஞாயிறு
மார்ச் 8 (வெள்ளிக்கிழமை): மஹாசிவராத்திரி (அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்)
மார்ச் 9: இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 10: ஞாயிறு
மார்ச் 17: ஞாயிறு
மார்ச் 22 (வெள்ளிக்கிழமை): பிஹார் திவாஸ் (பாட்னா)
மார்ச் 23: நான்காவது சனிக்கிழமை
மார்ச் 24: ஞாயிறு
மார்ச் 25 (திங்கட்கிழமை): ஹோலி (இரண்டாம் நாள்) - துலேட்டி/டோல் ஜாத்ரா/துலேந்தி (பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, இம்பால், கொச்சி, கோஹிமா, பாட்னா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் தவிர எல்லா இடங்களிலும்)
மார்ச் 26 (செவ்வாய்): யாசங் 2வது நாள்/ஹோலி (புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னா)
மார்ச் 27 (புதன்கிழமை): ஹோலி (பாட்னா)
மார்ச் 29: புனித வெள்ளி (அகர்தலா, குவாஹட்டி, ஜெய்ப்பூர், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் தவிர அனைத்து இடங்களிலும்)
மார்ச் 31: ஞாயிறு
எனவே வங்கி வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களைக் கணக்கிட்டு தங்களுக்குத் தேவையான பணத்தை இருப்பில் வைத்துக் கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
14 நாட்கள் என்பது கிட்டத்தட்ட அரை மாதக் கணக்கு வருகிறது. இதனால் வியாபாரிகள், வங்கிக் கடன் திரும்பச் செலுத்துவோர் போன்றவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு முன்யோசனையுடன் வாடிக்கையாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications