டிஜிட்டல்மயமாகும் வங்கிச் சேவைகள்.. காணாமல் போகும் வேலைவாய்ப்புகள்

தற்போது வங்கிச் சேவைகள் பெரும்பாலும் டிஜிட்டல்மயமாகிவிட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல தற்போது கிடையாது. பணம் அனுப்புவது, புதிதாக வங்கியில் கணக்கு தொடங்குவது என பல்வேறு வேலைகளையும் நாம் டிஜிட்டல் முறையிலேயே நடத்தி முடித்துக் கொள்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் வங்கி துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

டிஜிட்டல் மாற்றங்கள் வரவேற்க கூடிய வகையில் இருந்தாலும் சில குறிப்பிட்ட வங்கி வேலைவாய்ப்புகளை அது பறித்துள்ளது. CLERICAL பணிகளுக்கு இனி மனிதர்கள் தேவைப்படமாட்டார்கள். டிஜிட்டல் வங்கி சேவைகள் Middle, Lower end வேலை வாய்ப்புகளை பறித்துள்ளன. வங்கிகளில் Support staff எனப்படும் ஊழியர்களுக்கான தேவை குறைந்துவிட்டது. 2011 ஆம் ஆண்டில் இது 50 : 50 என்று இருந்த நிலையில் தற்போது 74:26 என மாறியுள்ளது.

டிஜிட்டல்மயமாகும் வங்கிச் சேவைகள்.. காணாமல் போகும் வேலைவாய்ப்புகள்

தற்போது செயற்கை நுண்ணறிவும் வளர்ச்சி அடைந்து வருவதால் கூடிய விரைவில் வங்கி துறை சார்ந்த பணிகளில் பெரும் மாற்றத்தை நாம் காண முடியும். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் நிதி அறிக்கையின் முன்னுரையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் சவால்களையும் எடுத்துரைத்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வங்கிகள் தங்களது ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய வேண்டி இருக்கும் எனக் கூறியுள்ளார். ஆட்டோமேஷன் மூலம் தற்போது பெரும்பாலான கிளரிக்கல் வேலைகள் குறைந்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். நடுத்தர அடுக்கு மற்றும் கீழ்த்தர அடுக்கு வேலைகள் வேலைகளுக்கு இனி ஆட்கள் தேவைப்பட மாட்டார்கள் தொழில்நுட்பமே அதனை செய்து முடிக்கும் என கூறியுள்ளார்.

குறிப்பாக 2013 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான உலகளாவிய போக்கையும் இந்த அறிக்கை அடையாளம் காட்டுகிறது. அதாவது நிதி துறையில் ஆதரவு நிலையில் இருக்கும் பணிகளுக்கான எண்ணிக்கை குறைந்து இருப்பதை அது குறிக்கிறது. அதேவேளையில் தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவை அதிகரித்திருக்கிறது. இந்த போக்கு இந்தியாவிலும் காண முடிகிறது என சக்திகாந்த தாஸ் கூறுகிறார்.

இந்தியாவின் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் இத்துறையில் ஒட்டுமொத்த ஆட்சேர்ப்பு 16.8% என வளர்ந்துள்ளதாம். எனவே தற்போது வங்கி துறையில் இருக்கும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என சக்தி காந்ததாஸ் தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை டிஜிட்டல் புரட்சியின் முன்னணியில் உள்ளது, இந்திய டிஜிட்டல் பொருளாதாரம் 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தியில் 20% இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது உள்ள 10 சதவீதத்திலிருந்து இரண்டு மடங்காக உயர இருக்கிறது.

எனவே டிஜிட்டல்மயமாக்கல் அடுத்த தலைமுறை வங்கிச்சேவைக்கு வழி வகுக்கிறது என கூறியுள்ளார். அதே வேளையில் டிஜிட்டல் சார்ந்த தகவல் திருட்டுகள், மீறல்கள், உள்ளிட்டவையும் அதிகரிக்கும் என வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அவற்றை எதிர்கொள்ளவும் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+