விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில் 6 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இந்த தகவல் உண்மையா? தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை? இந்த வாரம் தொடங்கி ஆறு நாட்கள் விடுமுறை என்பது உண்மையா? இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம். ஆக எந்த மாநிலத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை. அரசு பொது விடுமுறை நாட்கள் எத்தனை? என வாருங்கள் பார்க்கலாம்.
ஆறு நாட்கள் விடுமுறையா?
அக்டோபர் 18- திங்கட்கிழமை - கதி பிஹு (குவகாத்தி - அசாம்)
அக்டோபர் 19- செவ்வாய்க்கிழமை - ஈத்-இ-மிலாத் அல்லது முகமது நபியின் பிறந்தநாள் (குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்)
அக்டோபர் 20- புதன்கிழமை - மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை, ஐடி-இ-மிலத் (திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம்)
அக்டோபர் 22- வெள்ளிக்கிழமை - ஈத்-இ-மிலாத்-நபி (ஜம்மு-காஷ்மீர்)
அக்டோபர் 23- நான்காவது சனிக்கிழமை
அக்டோபர் 24- ஞாயிற்றுக்கிழமை
எச்சரிக்கையாக செயல்படுங்கள்?
ஆக மேற்கொண்டு விடுமுறை கால கட்டத்தினை தெரிந்து வைத்துக் கொண்டால், அதற்கேற்ப செயல்படலாம். ஏனெனில் தொடர்ச்சியான விடுமுறைகளுக்கு மத்தியில், அந்த சமயத்தில் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பிருப்பிருக்கிறது. இதனால் பயனாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
முன் கூட்டியே தயாராகுங்கள்
ஆக வங்கி வாடிக்கையாளர்கள் விடுமுறைக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட, இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம். பெற வேண்டிய இடத்திலும் முன் கூட்டியே அணுகலாம்.
மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்
மேற்கண்ட விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடுவதால், மக்கள் அதற்கேற்ப செயல்படுவது நல்லது. வங்கிகள் பொதுவாக நம் பணத்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு, செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications