சீன Applications நம்மள வெச்சி இவ்வளவு சம்பாதிச்சி இருக்காங்களா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய நாட்டு எல்லைகளைக் காக்கும் காவல் சாமிகள் நம் ராணுவ வீரர்கள். இந்திய ராணுவ வீரர்களை, சீனர்கள் தாக்கி, உயிரிழக்கச் செய்த செயல் நம்மில் பலரையும் கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

Recommended Video

Chinese Apps Ban-உண்மை காரணத்தை வெளியிட்ட India |Tik Tok Ban

இதற்காக சீன பொருட்களை புறக்கணிப்பது என்கிற கருத்து பரவலாக பேசப்பட்டது. இன்னொரு பக்கம் டேட்டாக்களை பாதுகாப்பை காரணம் காட்டி, மத்திய அரசு தன் பங்குக்கு சமீபத்தில் 59 சீன அப்ளிகேஷன்களை தடை செய்து இருக்கிறது.

டிக் டாக், யூ சி ப்ரவுசர், யூ சி நியூஸ், ஷேர் இட், கேம் ஸ்கேனர் போன்ற முக்கியமான செயலிகள் இந்த தடை செய்யப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலில் அடக்கம்.

சம்பாத்தியம்

சம்பாத்தியம்

இப்போது மேலே சொன்ன அப்ளிகேஷன்கள் எல்லாம், நம்மை (இந்தியர்களை) வைத்து எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்கள் என ஒரு செய்தி, ஒரு முன்னணி வலை தளத்தில் வெளியாகி இருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம். இனி ஒவ்வொரு செயலிகளாக, நம்மை வைத்து எவ்வளவு வருமானம் ஈட்டி இருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

டிக் டாக் சம்பாத்தியம் (Tik tok Revenue)

டிக் டாக் சம்பாத்தியம் (Tik tok Revenue)

Bytedance (India) என்கிற பெரிய நிறுவனத்தின் கீழ் செயல்படும் செயலி இது. இந்த செயலிக்கு அதிக அறிமுகம் தேவை இல்லை. இந்தியாவில் சுமாராக 61.1 கோடி டவுன்லோட்கள் செய்யப்பட்டு இருக்கிறதாம். டிக் டாக்-க்கு இந்தியா தான் மிகப் பெரிய சந்தை. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் ஒட்டு மொத்தமாக Bytedance (India) கம்பெனி, 43 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கிறார்கள் என்கிறது சென்சார் டவர்.

பைட் டான்ஸ் விவரம்

பைட் டான்ஸ் விவரம்

இந்த Bytedance என்கிற கம்பெனியின் கீழ் தான், இந்தியாவில் டிக் டாக், ஹலோ என 5 கம்பெனிகள் இருக்கிறதாம். இந்த Bytedance கம்பெனி, கேமன் தீவுகளில் பதிவு செய்து இருக்கிறார்களாம். இந்தியாவில் பைட் டான்ஸ் கம்பெனி சுமாராக 1,000 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கிறதாம். அடுத்த அப்ளிகேஷனுக்குப் போவோம்.

யூ சி ப்ரவுசர் & யூ சி நியூஸ்

யூ சி ப்ரவுசர் & யூ சி நியூஸ்

இது அலி பாபா குழுமத்துக்குச் சொந்தமான செயலிகள். யூ சி வெப் மொபைல் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளின் கீழ் 13 கோடி ஆக்டிவ் யூசர்கள் இருக்கிறார்களாம். இந்தியாவில் கூகுள் குரோமுக்கு அடுத்து, அதிகம் பேர் பயன்படுத்தும் ப்ரவுசர் யூ சி ப்ரவுசர் தானாம். யூ சி வெப் மொபைல் கம்பெனி இந்தியாவில் சுமாராக 100 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. 2018 - 19-ல் 226 கோடி ரூபாயை வருவாயாக சம்பாதித்து இருக்கிறதாம்.

ஷேர் இட் (Share IT)

ஷேர் இட் (Share IT)

இந்த செயலியும் இந்தியாவில் கொஞ்சம் அதிக பிரபலம் தான். ஒரு முழு படத்தை ஒரு சில நிமிடங்களில் அனுப்ப பயன்படுத்திக் கொள்ளும் செயலி இது. இந்தியாவில் இதற்கு 400 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் இருக்கிறார்களாம். பயங்கரமான யூசர்களைக் கொண்டிருந்தாலும், அதை பணமாக்கிக் கொள்ள முடியவில்லை. 2018 - 19 நிதி ஆண்டில் 14.73 கோடி ரூபாயை வருவாயாக சம்பாதித்து இருக்கிறார்களாம்.

கேம் ஸ்கேனர் (Cam scanner)

கேம் ஸ்கேனர் (Cam scanner)

உலகிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் அப்ளிகேஷன் என்றால் அது கேம் ஸ்கேனர் தானாம். இந்த செயலியை இந்தியாவில் சுமாராக 10 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். இவர்களும் கணிசமாக நம்மை வைத்து வருவாய் சம்பாதித்து இருப்பார்கள். ஆக சீனர்கள், நம்மை வைத்து செமயாக அகல்லா கட்டி இருக்கிறார்கள்.

சீன புறக்கணிப்பு

சீன புறக்கணிப்பு

இந்தியாவில் வெறுமனே சீன செயலிகளை மட்டும் புறக்கணிப்பதால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. ஆனால், உண்மையாகவே, சீன புறக்கணிப்பைக் முழுமையாக கொண்டு வர வேண்டும் என்றால், டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும், மேக் இன் இந்தியா திட்டத்தையும் அதி விரைவாகவும், அதிகமாகவும் செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து இதில் கவனம் செலுத்தும் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banned chinese apps reach and revenue details

Famous Chinese applications and its user base in India an its revenue details.
Story first published: Wednesday, July 1, 2020, 11:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X