இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்வோர் சில மாதங்கள் முன்பு வரையில் எப்போது இந்திய அரசு இதைத் தடை செய்யும் எனப் பயந்துக் கொண்டு இருந்த நிலையில் மத்திய அரசு கிரிப்டோவை தடை செய்யாமல் ஒழுங்கு முறைப்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம் என அறிவித்தது முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளித்தது.
இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்பில் கூடக் கிரிப்டோ முதலீட்டின் மீது 30 சதவீதம் வரி விதிக்கும் போது முதலீட்டாளர்கள் தடை செய்யாமல் வரி விதித்தது மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரி இந்தியாவில் கிரிப்டோகரன்சி-யை தடை செய்வது மேல் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
டி ரபி சங்கர்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் முக்கியமான பணியைச் செய்து வரும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி ரபி சங்கர் கிரிப்டோகரன்சி குறித்து வெளியிட்ட கருத்து தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. குறிப்பாகக் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தடை செய்வது சிறந்தது
பிப்ரவரி 14 ஆம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்தின் 17வது ஆண்டின் வங்கி தொழில்நுட்ப மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி ரபி சங்கர் இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்வது சிறந்த முடிவாக இருக்கும் எனப் பேசியுள்ளார்.
கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை
இந்தியாவில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று பலர் தங்கள் கருத்தை முன்வைத்த நிலையில், அக்கருத்துக்களை ஆய்வு செய்த போது, அவற்றில் எதுவுமே அடிப்படை முதலீட்டுக்கு ஆதாரமாக நிற்கவில்லை" என்று டி ரபி சங்கர் கூறினார்.
ப்ரைவேட் கிரிப்டோகரன்சி
சமீபத்தில் கூட ரிசர்வ் வங்கி கவர்னர் ப்ரைவேட் கிரிப்டோகரன்சிகள் நாட்டின் வளர்ச்சிக்காக, பணவீக்கம், நிதி நிலை நிலைதன்மை மேம்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சிகள் கெடுக்கிறது எனச் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி மசோதா
இந்தியாவில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் வேளையில் மத்திய அரசு ஒழுங்குமுறைக்கு ஆதரவு அளிக்கும் இதேவேளையில் ரிசர்வ் வங்கி கவர்னர் கிரிப்டோகரன்சியைத் தடை செய்வது குறித்து முதல் முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications