மும்பை: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், ஈடுகட்ட முடியாத அளவில் இழப்பீடுகளை ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கிடையில் பொருளாதாரம் மீண்டும் பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. பல ஆய்வு நிறுவனங்களும் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்புகளை திருத்தி வருகின்றன.
அந்த வகையில் பார்க்லேஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதத்தினை 9.2% ஆக குறைத்துள்ளது.
பொருளாதார சரிவு
இந்தியாவில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில், தற்போது கருப்பூஞ்சை தொற்றும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கொரோனாவுக்கான தடுப்பூசிகளே இன்னும் முழுமையாக போட்டு முடிக்கப்படவில்லை. இதுவே மந்த நிலையில் சென்று கொண்டு இருக்கும் நிலையில், பொருளாதாரம் கொரோனாவை விட மிக வேகமாக சரிவினைக் கண்டு வருகின்றது.
கடுமையான லாக்டவுன்
கடந்த முறை போன்று இந்த முறையும் நாடு தழுவிய முழு லாக்டவுன் இல்லையென்றாலும், பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் முந்தைய ஜிடிபி கணிப்பு விகிதங்களை குறைத்து வருகின்றன. பார்கிலேஸ் நிறுவனம் முன்னதாக நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 11% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதனை 10% ஆக குறைத்தது. அதனை தற்போது 80 அடிப்படை புள்ளிகள் குறைத்து 9.2% மாற்றியமைத்துள்ளது.
பல காரணிகள்
இது பெருகி வரும் கொரோனா தாக்கம், மந்தமான தடுப்பூசி நடைமுறைகள் உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியா மூன்றாவது கட்ட கொரோனா பரவலை சந்தித்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்க கூடும். இது பொருளாதாரத்தில் இன்னும் வீழ்ச்சியைக சந்திக்க கூடும். இதனால் ஜிடிபி விகிதம் இன்னும் குறையக்கூடும். அப்படி மூன்றாவது அலை பாதித்தால் ஜிடிபி விகிதமானது 7.7% ஆக குறையலாம் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வழக்குகள் குறையலாம்
தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இது கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் வந்துள்ளது. குறிப்பாக ஹாட்ஸ்பாட்டாக இருந்தா மகராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் குறையத் தொடங்கியுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஜூன் மாத இறுதிக்குள் புதிய வழக்குகள் எண்ணிக்கையானது கணிசமாக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications