பிரிட்டன்: உலகமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முடித்து விட்டு புத்தாண்டுக்கு தயாராகி வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு மேற்கத்திய நாடுகளில் இது விடுமுறை காலமாக இருக்கிறது. அனைவரும் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பார்க்கலேஸ் வங்கி திடீரென ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய பார்க்கலேஸ் நிறுவனம் திடீரென 35 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கை சேர்ந்த 15 வங்கியாளர்களையும் வர்த்தகர்களையும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஆண்டுதோறும் அவர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் தொகையும் வழங்காமல் திடீரென பணியிலிருந்து நீக்கி உள்ளது.
வழக்கமாக பார்க்கலேஸ் வாங்கி ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி ஊழியர்களுக்கு கணிசமான தொகையை ஆண்டு போனஸாக வழங்கும். இது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் விடுமுறை காலத்துக்கும் உகந்த வகையில் இருக்கும். பெரும்பாலான ஊழியர்கள் இந்த போனஸுக்காகவே காத்திருப்பர். ஆனால் பார்க்கலேஸ் வங்கி அதனை கொடுக்காமல் ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய மொத்த போனஸ் தொகை ஒரு மில்லியன் டாலரை எட்டும் என சொல்லப்படுகிறது. இந்த தொகையை வழங்காமல் புத்தாண்டு அதுவுமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் பலரும் பார்க்கலேஸ் வங்கியின் நடவடிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வங்கியின் இந்த திடீர் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் 10 மில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த வங்கியால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களும் தொழிலாளர் அமைப்புகளை நாடி இருக்கிறார்களாம்.
இதனிடையே தங்கள் நிறுவனம் ஊழியர்களின் செயல் திறன்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாகவும் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடு தரமாக இருப்பதை உறுதி செய்யவே இப்படி செய்வதாக கூறியுள்ளது. இருந்தாலும் நோட்டீஸ் எதுவும் வழங்காமல் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது தான் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
2024ஆம் ஆண்டினை பொறுத்தவரை சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. சுமார் 500க்கும் அதிகமான நிறுவனங்கள் 1.50 லட்சம், ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளன. டெஸ்லா, டெல், ஐபிஎம், இண்டெல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.
Story Written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications