மண் மனம் மாறாத பொருட்களுக்கு எப்போதுமே மக்களிடம் வரவேற்பு உண்டு. இந்த ஒரு தாரக மந்திரம் தான் உத்தரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவரை பெரிய தொழிலதிபராக மாற்றி அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்ய வைத்திருக்கிறது.
பரோஸி: அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் நெய் உள்ளிட்ட நமது பாரம்பரிய உணவுப் பொருட்களை தேடும் போது பரோஸி நிறுவன பொருட்கள் நமது கண்களில் படாமல் இருக்காது. பரோஸி என்பது டி2சி நிறுவனம்.

அதாவது பொருட்களை தயாரித்து நேரடியாக வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யும் நிறுவனம். தூய்மையான, நமது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் நெய், தேன், ஊறுகாய், வெல்லம், வெண்ணெய், எண்ணெய் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.
உத்தரபிரதேசம்: தர்லாப் ராவத் உத்தரபிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் குடும்பம். பல சவால்களுக்கும் வறுமைக்கும் மத்தியில் தர்லாப் ராவத் டெல்லி கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்றார்.
பின்னர் மகேந்திரா உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பணி செய்ய தொடங்கினார். மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சென்ற இவர் 12 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் என்ற சம்பளத்திற்கு உயர்ந்தார்.
நல்ல ஊதியம், வேலை இருந்தாலும் சுய தொழில் செய்ய வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு.
ஒரு நாள் திடீரென தனது வேலையை உதறிவிட்டு சொந்த ஊர் திரும்பிய அவர் வீட்டில் இருப்பவர்களை சமாதானப்படுத்தி மாட்டு பண்ணை வைத்தார். பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதே இவரது நோக்கமாக இருந்தது.
சிறு வயதில் , அம்மா விறகு அடுப்பில் பால் காய வைத்து கொடுப்பதை நினைவுகூறும் வகையில் பரோஸி என தனது நிறுவனத்துக்கு பெயர் சூட்டினார். பரோஸி என்றால் கிராமங்களில் விறகு அடிப்பில் பானையில் பாலை ஊற்றி சூடு செய்வது என அர்த்தம். இப்படி 50 மாடுகளை கொண்டு ஒரு பண்ணையை உருவாக்கி 2016ஆம் ஆண்டில் பரோஸி நிறுவனத்தை தொடங்கினார்.
ஆனால் எதிர்பார்த்தப்படி தொழில் செல்லவில்லை. சேமிப்புகள் அனைத்தும் கரைய தொடங்கின. சுதாரித்து கொண்ட ராவத், குர்குவானில் நேரடியாக சென்று பால் விற்பனை செய்து வாடிக்கையாளர்களை பிடித்தார். பால் மட்டுமின்றி நெய், வெண்ணெய் போன்ற பொருட்களின் விற்பனையும் படிப்படியாக உயர்ந்தது.
ஈ- காமர்ஸ் வளர்ச்சியை புரிந்து கொண்ட அவர் பரோஸிக்கு என தனியாக இணையதளம் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களிலும் பரோஸி பொருட்கள் கிடைக்கும்படி செய்தார். இதனால் விற்பனை அதிகரித்தது. தற்போது பால் பொருட்கள் மட்டுமின்றி எண்ணெய், தேன் உள்ளிட்டவற்றையும் பாரம்பரிய முறையில் தயாரித்து விற்பனை செய்கிறார். இவரது பொருட்கள் அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. பரோஸியின் ஓராண்டு வருமானம் 8 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.
Story Written By: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications