கோவை: கோயம்புத்தூரில் அண்ணா தொழிற்பேட்டையின் அடிப்படை உள் கட்டமைப்பு பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தாலுகாவில் இருக்கும் கிட்டாம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையை கட்டமைத்து வருகிறது. இந்த தொழிற்பேட்டையின் அடிப்படை உள்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் ஜூன் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என மாவட்ட தொழில் துறை அதிகாரிகள் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

கிட்டாம்பாளையம் பகுதியில் 316 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் 280 ஏக்கர் நிலமானது கோயம்புத்தூர் மாவட்டத்திலும் 35 ஏக்கர் இடம் திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் கிராமத்திலும் இருக்கிறது. இந்த இரண்டு மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து நிலத்தை கையகப்படுத்தி பணிகளை தொடங்குவதற்கு தாமதம் ஆகிவிட்டது. தற்போது அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தொழிற்பேட்டையாக அறிஞர் அண்ணா தொழில் பூங்கா இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். முதல் கட்டமாக இந்த தொழில் பூங்காவிற்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலைகள், குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக 24.61 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறதா,. இது தவிர இரண்டு நீர்நிலை தொட்டிகளும் கட்டமைக்கப்பட்டு வருவதாக அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டைக்கான அதிகாரி சுகந்தி தெரிவித்துள்ளார்.
தொழிற்பேட்டையில் அடிப்படை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக அரசு சார்பாக 12.30 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் மற்ற பங்குதாரர்கள் தரப்பில் மீதமுள்ள தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார் . ஜூன் மாதத்திற்குள் சாலைகள் கட்டப்பட்டு விடும் என்றும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளார். மற்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் அடுத்த 40 நாட்களுக்குள் முடிவடைந்து விடும் என தெரிவித்திருக்கிறார்.
இந்த தொழில் பூங்காவில் 15 சென்ட், 30 சென்ட், 45 சென்ட், மற்றும் 90 சென்ட் என நான்கு வகைகளாக பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. மொத்தம் 585 பிளாட்டுகள் இங்கே போடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த பகுதியில் ஏற்கனவே ஐந்து நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றன. மேலும் பதினைந்து நிறுவனங்கள் இங்கே தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ஒப்புதல் கேட்டிருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த அண்ணா தொழிற்பேட்டை பணிகள் முழுமை பெற்று தொழில் நிறுவனங்கள் இங்கே ஆலைகளை அமைக்கும் போது நேரடியாக ஐந்தாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications