செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தீவிரவாத தாக்குதல்களால் அரசி ஏற்றுமதி அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐரோப்பிய சந்தைக்கு அதிகளவிலான பாசுமதி அரிசி ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி செய்யப்படும்.
தற்போது யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் இஸ்ரேல் வாயிலாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை டிரோன் வாயிலாகவும், ஏவுகணை வாயிலாகவும் தாக்கும் காரணத்தால் இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் பாசுமதி அரிசி விலை 5-10 சதவீதம் குறைந்துள்ளது. மக்களை வாட்டி வதைத்த உணவு பணவீக்கம் இதன் மூலம் கணிசமாகக் குறைய உள்ளது, இந்தியாவில் பெரும்பகுதி மக்களின் முக்கிய நுகர்வு பாசுமதி அரிசி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யெமனின் ஹவுதிகளின் தாக்குதல்கள் சூயஸ் கால்வாய் வழியில் செல்வதைக் கப்பல் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது. இதன் மூலம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியையும் பாதித்தது.
இதன் காரணமாக இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை 3-4 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய கணிப்பை வெளியிட்டு உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை கடந்த ஒரு வாரத்தில் ஒன்று டன்னுக்கு 30 டாலர்கள் உயர்ந்து 940 டாலராக உயர்ந்துள்ளது.
யெமனின் ஹூதிகளின் தாக்குதல்கள் காரணமாகச் சர்வதேச அமைப்புகள் யெமன் நாட்டிற்கான சரக்குக் கட்டணம் முன்பு ஒரு கண்டெய்னருக்கு 850 டாலராக இருந்த நிலையில், இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து 2,400 டாலராக அதிகரித்துள்ளது.
இதேபோல், சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டாவிற்குச் சரக்குக் கட்டணம் ஒரு கண்டெய்னருக்கு 300 டாலரில் இருந்து 1,500 டீலராக உயர்ந்துள்ளது. டர்பனுக்கான கட்டணம் ஒரு கண்டெய்னருக்கு 700 டாலரில் இருந்து 1,200 டீலராக உயர்ந்துள்ளது.
இந்தியா ஆண்டுக்கு 4-4.5 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது. இதில் வளைகுடா நாடுகள் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில் சுமார் 80 சதவிகிதம் பங்கீட்டை கொண்டு உள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் அரிசி விலை உயர்ந்துள்ளது, மேலும் இந்தியாவில் பாசுமதி அரிசி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications