பல இந்தியர்களுக்கு பேட்டா என்றவுடன் சட்டென அவர்களது நினைவுக்கு வருவது ஸ்கூல் ஷூ, விதவிதமான செருப்புகள்தான். இந்த பேட்டா நிறுவனத்தின் பூர்வீகம் ஐரோப்பா. செக் ரிப்பப்ளிக் நாட்டில் தோன்றி இப்போது ஸ்விட்ஸர்லாந்தில் இருந்து செயல்படுகிறது.
பெரும்பாலும் பேட்டாவை பல நாடுகளில் தங்களது உள்ளூர் தயாரிப்பாகவே மக்கள் கருதுகின்றனர். இந்தியாவிலும் 1931 ஆம் ஆண்டிலிருந்து பேட்டா ஷூக்கள் புழக்கத்தில் உள்ளன. கொல்கத்தாவில் முதலில் தொடங்கப்பட்டது.

1894 ஆம் ஆண்டில் செக்கஸ்லோவாக்கியாவை சேர்ந்த ஷூமேக்கர் டாமஸ் பேட்டா, அவரது பிரதர் அன்டோனின், தங்கை அண்ணா ஆகியோர் சேர்ந்து பேட்டா தயாரிப்புகளை உருவாக்கினர். பேட்டாவின் மகன் ஜான் ஆன்டானின் தலைமையில் இந்த கம்பெனி உற்பத்தியைப் பெருக்கியது. மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் உலக அளவில் சந்தையைப் பரப்பியது. பேட்டாவின் தரம் பெரிய அளவில் தொழிற்சாலை, கிளைகளை உலக அளவில் எடுத்துச் சென்றது.
இரண்டாம் உலகப்போர் போன்ற கடுமையான சூழ்நிலையிலும் தங்களது வியாபாரத்தை பேட்டா நிறுவனம் நிலைநிறுத்தியது. உள்ளூர் சந்தை, சமூக பொறுப்பு ஆகியவை பேட்டாவின் பெயருக்கு புகழ் சேர்த்தது. 20 நூற்றாண்டின் மத்தியில் பேட்டா பிராண்டு அதன் புதுமை, வாங்கும் வசதிகளால் உலகின் பெரிய ஷூ பிராண்டாக மாறியது.
1920களில் பேட்டா நிறுவனரின் கொள்ளுத்தாத்தா இந்தியாவுக்கு வந்து மக்களின் தேய்ந்து போன காலணிகளையும், வெறுங்காலில் நடந்து செல்வதையும் நோட்டமிட்டார். தங்களது தயாரிப்புக்கு மிகப் பெரிய சந்தை இருக்கிறது என்பதையும் மலிவான விலையில் தரமான காலணிகளைத் தந்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என்பதை அவர் கணக்கிட்டார்.
மலிவான விலை, உயர்ந்த தரம் ஆகியவற்றுடன் கூடிய காலணிகளை தயாரித்ததால் பேட்டாவின் சாம்ராஜ்ஜியம் நாடு முழுவதும் பரவியது. 1931 ஆம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் நுழைந்த பின்னர் பேட்டவின் பயணம் பல நெருக்கடிகளை சந்தித்தது. இருப்பினும் தரத்தில் எப்போதும் விட்டுக் கொடுக்கவில்லை.
இந்தியர்கள் 11ஆம் நம்பர் பஸ்ஸை அதிகம் பயன்படுத்துவதால் ரப்பரில் ஆன செப்பல்கள், சாண்டல்கள், பிளிப்பிளாப் ஆகியவற்றுக்கு அதிக டிமாண்ட் இருந்தது.
பேட்டாவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஆனந்த் நாரங்க் கூறுகையில், இந்தியர்கள் நீடித்த உழைப்பு, ஸ்டைல் இரண்டையும் விரும்புகின்றனர். இந்தியாவில் தலைக்கு ஆண்டுக்கு 1.7 காலணிதான் வாங்கப்படுகிறது. இதே வளர்ந்த நாடுகளில் ஆண்டுக்கு 6 ஜோடிகள் வாங்கப்படுகின்றன. எனவே வளர்ச்சிக்கு இன்னும் இடம் இருந்தது.
பேட்டா இப்போது அநேகமாக எல்லா குடும்பத்திலும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. 1973 ஆம் ஆண்டு பேட்டா இந்தியா நிறுவனம் என்ற பெயரில் பங்குச் சந்தைக்குள் நுழைந்தது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய காலணி பிராண்டாக பேட்டா மாறியது.
தனது தனித்துவமான மார்க்கெட்டிங் உத்திகள் மூலம் இந்திய கலாசாரத்துக்குள் ஊடுருவியது. பள்ளிக்குச் செல்வது முதல் புதிய வேலைக்குச் செல்வது வரை பேட்டா ஷூக்கள்தான் மக்களது ஒரே சாய்ஸாக இருந்தது.
1939 ஆம் ஆண்டு கம்பெனி வெற்றி பெற்றது உறுதியான போது வாரத்துக்கு 3500 ஜோடிகள் விற்பனையானது. ஒவ்வொரு ஊழியரும் தலா 4000 விற்றார்.
பேட்டா இந்தியாவின் பிராண்டு ஆலோசகர் ஹரிஷ் பிஜூர் கூறுகையில், நிறுவனத்தின் புகழ் அவர்களது டிசைனில் உள்ளது. இந்தியர்களின் கால்களுக்கு ஏற்ப அவர்களது வேலைக்குத் தகுந்தபடியும் தட்பவெப்ப நிலையை பொறுத்தும் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டன. உள்ளூர் விருப்பத்தின்படி வடிவமைக்கப்பட்டதால் இந்திய வாடிக்கையாளர்களை பேட்டா கவர்ந்தது என்றார்.
அண்மைக்காலமாக பேட்டாவில் பல புதிய மாற்றங்கள் தோன்றின. பேஷன் நிறைந்த, கவர்ச்சியான ஸ்டைலில் காலணிகள் உருவாக்கப்பட்டன. பாரம்பரியமாக இருந்த வசதியான காலணி என்பதில் இருந்து சற்றே இது வித்தியாசப்பட்டது.
2023-14இல் உலக நடப்புகளுக்கு ஏற்ப மாடர்ன் டிசைன்களை கூடுதலாக அறிமுகப்படுத்தியது.
இப்போது பேட்டா இந்தியா 17 மில்லியன் ஜோடி ஷூக்களை 82 நாடுகளுக்கும் மேலாக விற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் 30 ஆயிரம் டீலர்களும் 1375 கடைகளும் உள்ளன.இந்நிலையில் பிராண்டின் பிம்பத்தை அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் மரபணுவில் ஊடுருவி விட்ட பேட்டா ஹஷ்பப்பீஸ் எனப்படும் தொழில்முறை காலணிகளையும் அவிழ்த்துவிட்டது.
2018இல் நடிகை கிரித்தி சனானை பெண்கள் காலணிகளுக்கும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ஆண்கள் காலணிகளுக்குமான பிராண்டு அம்பாஸிடராக பேட்டா தேர்ந்தெடுத்தது. கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரித்தி மந்தனாவும் விளையாட்டு பிராண்டான பவரை விளம்பரப்படுத்தினார்.
இப்போது 90 நாடுகளில் 5000 கிளைகளாக பேட்டா செயல்படுகிறது. மிலானில் பேட்டா பேஷன் வீக்எண்டு நிகழ்ச்சி மூலம் சொகுசு, லைப்ஸ்டைல், காலணி டிரெண்டுகளை மையமாக வைத்து விளம்பரம் செய்யப்பட்டது.
இந்தியாவில் பேட்டாவின் தொடர்பு தரமான காலணியை நியாயமான விலையில் தருவதாகும். 1920 ஆம் ஆண்டில் இதன் நிறுவனர் வைத்த தொலைநோக்குச் சிந்தனையாகும். பள்ளியில் தொடங்கி பணி ஓய்வு வரை மக்களின் வாழ்க்கையின் பல கட்டங்களிலும் பேட்டா ஒன்றிணைந்து இருந்தது. இந்திய காலணி சந்தையில் பேட்டாவின் புதுமைகள் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து விட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications