500 ஊழியர்கள் பணி நீக்கம்.. பிபிசி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான பிபிசி (BBC), கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக, பிபிசி 500-க்கும் அதிகமான பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அடுத்த 20 மாதங்களில் இந்தப் பணி நீக்க நடவடிக்கையை எடுக்க உள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பிபிசி நிறுவனத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியை, தற்போதைய மாறிவரும் ஊடகச் சூழலுக்கு ஏற்ப பிபிசியை தயார்படுத்துவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

 500 ஊழியர்கள் பணி நீக்கம்.. பிபிசி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

பிரிட்டனில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி பார்க்கும் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையை வைத்து செயல்படும் நிறுவனம் BBC. இந்த தொகையை "licence fee" என்று கூறுவார்கள்.

இந்த கட்டணத்தை வைத்தே பிபிசி தனது செய்திகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. ஆனால் சமீப காலங்களில் தொலைக்காட்சியை பார்க்கும் பழக்கம் குறைந்து, அதற்கு பதிலாக மக்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பிபிசிக்கு கிடைக்கும் வருமானத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு UK குடும்பமும் செலுத்தும் வருடாந்திர £169.50 கட்டணத்தை பெரிதும் நம்பியிருக்கும் BBC, ஸ்ட்ரீமிங் மற்றும் பிற சேவைகளுக்கு மக்கள் மாறியதன் காரணமாக நிதி சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது.

இதன் காரணமாக மார்ச் 2026-ஆம் ஆண்டுக்குள் 500 பணிநீக்கங்களைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 10 சதவிகிதம் பணியாளர்களின் எண்ணிக்கையை ஏற்கனவே BBC குறைத்துள்ளது. அதாவது இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுமார் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

செவ்வாய்கிழமை அன்று BBC வெளியிட்ட அதன் வருடாந்திர ஆண்டு அறிக்கையில், இந்த மாற்றங்கள் குறித்து விவரித்த BBC, "பார்வையாளர்களை இருக்கும் இடத்திற்கு சென்றடைய தங்கள் டிஜிட்டல் அணுகுமுறையை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

BBC தனது நிதி நெருக்கடியை சமாளிக்கவும், தற்போது உள்ள தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை, மக்களுக்கு அதிக பயனுள்ள செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை உருவாக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+