ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மகளிர் அணிக்கு ரூ.51 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம், கடந்த 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தோல்விகள் உட்பட பல தசாப்தங்களாக தொடர்ந்த உலகக் கோப்பை கனவு நனவானது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற வரலாற்றுச் சாதனை குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "இது மகளிர் கிரிக்கெட்டில் ஒரு திருப்புமுனை என தெரிவித்தார். மேலும், இந்த வெற்றியை 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றிக்கு இணையானதாக ஒப்பிட்டு பேசினார்.
1983இல் கபில் தேவ் இந்தியாவை உலகக் கோப்பையை வெல்ல வைத்து கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தினார். அதே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இன்று நமது மகளிர் அணி கொண்டு வந்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அவரது அணி இன்று கோப்பையை வென்றதுடன் மட்டுமல்லாமல், அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளனர்.
அடுத்த தலைமுறை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அவர்கள் மிகச் சிறந்த ஒரு பாதையை அமைத்துக் கொடுத்துள்ளனர். எங்கள் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தபோதே மகளிர் கிரிக்கெட் அடுத்த கட்டத்தை எட்டியது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்திம் செயலாளராக ஜெய ஷா, (2019 முதல் 2024 வரை) பொறுப்பேற்றதில் இருந்து, மகளிர் கிரிக்கெட்டில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். வீரர்களுக்கு ஊதிய சமத்துவமும் (Pay Parity) சரிசெய்யப்பட்டது. கடந்த மாதம், ஐசிசி தலைவராக இருந்த ஜெய் ஷா, மகளிர் உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை 300 சதவீதம் அதிகரித்தார்.
முன்னர் 2.88 மில்லியன் டாலராக இருந்த பரிசுத் தொகை, தற்போது 14 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் மகளிர் கிரிக்கெட்டை பெரிதும் ஊக்குவித்துள்ளன. மேலும், இந்தச் சாதனையைப் பாராட்டி, பிசிசிஐ-யும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அடங்கிய முழு அணிக்கும் ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பரிசுத் தொகையான ரூ.51 கோடி, அணியின் அனைத்து வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. இது தவிர, உலகக் கோப்பையை வென்ற அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வழங்கும் சுமார் ரூ.40 கோடி பரிசுத் தொகையையும் இந்திய அணி பெறுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications