இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் பேண்டசி ஸ்போர்ட்ஸ் கேம் தளமான ட்ரீம்11 இன்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஜி ஸ்பான்சர்ஷிப் குறித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளது. ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-ஐ நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தால் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளன.
இந்த புதிய மசோதா மூலம், நாடு முழுவதும் பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்கிறது. இதேபோல் ரியல் மனி கேம் தொடர்புடைய பிராண்டுகள், நிறுவனங்கள் விளம்பரம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் ரூ.358 கோடி மதிப்பிலான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆன்லைன் கேமிங் மசோதா எதிரொலியாக 2023 முதல் 2026 வரையிலான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை ஸ்பான்சராக இருந்த ட்ரீம்11, இந்த ஒப்பந்தத்தைத் தொடர முடியாது என்று பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தது. நேற்று முதல் நடந்து வந்த பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வந்துள்ளது.
ஒப்பந்தம் முறிவு செய்யப்பட்ட முடிவை உறுதிப்படுத்திய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "2025-ஆம் ஆண்டு ஆன்லைன் கேமிங் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிசிசிஐ மற்றும் ட்ரீம்11 மத்தியிலான பேச்சுவாத்தையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிர் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டன. எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு நிறுவனங்களுடனும் பிசிசிஐ இணைந்து செயல்படாது," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த முடிவு, பிசிசிஐ-யின் எதிர்கால ஸ்பான்சர்ஷிப் கொள்கைகளில் கடுமையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.

ட்ரீம்11, இந்திய கிரிக்கெட் அணியுடன் ரூ.358 கோடி மதிப்பிலான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை 2023-ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு என கையெழுத்திட்டு இருந்தது. ஆனால், புதிய சட்டத்தின் காரணமாக, இந்த ஒப்பந்தத்தைத் தொடர்வது நிதி மற்றும் சட்ட ரீதியாக சாத்தியமற்றது என்று நிறுவனம் முடிவு செய்தது தற்போது இதில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த டைட்டில் ஸ்பான்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது..? ஏற்கனவே டாடா ஐபிஎல்-க்கு ஸ்பான்சர் செய்து வரும் வேளையில் இந்திய அணிக்கும் ஸ்பான்சர் செய்யுமா..? அல்லது அம்பானியின் ஜியோ, அதானியின் அதானி குழுமம் களத்தில் இறங்குமா..?


Click it and Unblock the Notifications