இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக மோசமாக சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி படு மோசமாக தொடரை இழந்தது. இதில் வீரர்கள் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையில், வரும் சாம்பியன் டிராபி போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ ஒரு முக்கிய மாற்றம் செய்யலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் ஜனவரி 11, சனிக்கிழமையன்று, மும்பையில் சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவின் செயல்திறன் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

அறிக்கைகளின்படி மறுஆய்வுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஒன்று, வீரர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான வேரியபிள் பே அமைப்பை அறிமுகப்படுத்துவதாகும். அதன்படி, இது நடைபெறும்பட்சத்தில், வீரர்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும். இல்லையெனில் தேவைப்பட்டால், அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் ஊதியக் குறைப்பை எதிர்கொள்வார்கள் என்பதே உண்மை. எந்த ஒரு வீரரின் செயல்திறன் இல்லாவிட்டாலும் அது அவரது கிரேட் முதல் அவரது வருமானத்தை பாதிக்கும்.
எனவே, வீரர்கள் பொறுப்புடன் விளையாடவேண்டும். இந்த கொடுக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, வீரர்கள் செயல்திறன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக இல்லை என்று கருதப்பட்டால், அவர்கள் வேரியபிள் பே கட் செய்யப்படுவதை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, பிசிசிஐ தனது டெஸ்ட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை முறையை அறிமுகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, 2022-23 முதல் ஒரு சீசனில் 50% க்கும் அதிகமான டெஸ்டில் விளையாடும் வீரர்கள் ஒரு விளையாட்டுக்கு ரூ. 30 லட்சம் நிதி ஊக்கத்தொகையைப் பெறுவார்கள். மேலும் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஆட்டத்திற்கு ரூ.45 லட்சமாக ஊதியம் அதிகரிக்கும்.
இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்கும் போது தற்போதைய வீரர்கள் சற்று அலட்சியமாக இருந்தார்களா என்ற விவாதம் இருந்தது. இந்த கூட்டத்தின் போது, சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அதற்கான நோக்கம் இல்லாதது குறித்தும் உயர் அதிகாரிகள் விவாதித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்பை அணி நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. ஆனால் பல வீரர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
2024-25 சீசனில், இந்தியா 10 டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது மற்றும் வரலாற்றில் முதல்முறையாக, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்று 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து தொடரை 1-3 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications