பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். எனினும் அந்த சமயத்தில் பலரும் அதே மன நிலையில் அதிகளவிலான ஆர்டர்களை எடுப்பர். இதனால் குறிப்பிட்ட சில நல்ல பங்குகளில் ஆர்டர்கள் அதிகளவில் எடுக்கப்படும்.
இந்த சமயத்தில் என். எஸ்.இ எஃப் & ஓவில் ஓபன் இன்ட்ரஸ்ட் விகிதம் 95% லிமிட்டினை தாண்டினால் அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யடும்.
அப்படி 95% வரம்பினை தாண்டிய 4 பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்பட்டுள்ளன.
என்னென்ன பங்குகள்?
இந்த தடை பட்டியலில் ஆர்பிஎல் வங்கி, இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ், பி வி ஆர், இந்திய சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் அடங்கும். என் எஸ் இ தினசரி இதுபோன்ற 95% வரம்பினை தாண்டிய பங்குகளை அப்டேட் செய்து வருகிறது. இதில் பொதுவாக வணிகம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
மீண்டும் எப்போது வணிகத்திற்கு வரும்?
ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இது மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும். இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்ற நிலையில், தற்போது என்.எஸ்.இ-யில் இந்த 4 நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
எப்படி தெரிந்து கொள்ளலாம்?
இதனை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி அபராதத்தில் இருந்து தப்பிப்பது? இதனை https://www.niftytrader.in/ban-list என்ற என்.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். இதில் தடை செய்யப்பட்ட பங்குகள், தடை செய்யப்படலாம் என்ற நிலையில் உள்ள பங்குகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருக்கும்.
இனி தடை செய்யலாம்
இந்த பட்டியியலில் டெல்டா கார்ப், அம்புஜா சிமெண்ட், BHEL, ஜீ தமிழ், பஞ்சாப் நேஷனல் வங்கி, சன் டிவி எஸ்கார்ட்ஸ், எல் & டி ஹவுஸிங் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள்இந்த தடை பட்டியலில் இணைந்தாலும் இணையலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்றன. இவற்றின் ஓபன் இன்டஸ்ட்ரஸ்ட் விகிதமானது 80 - 94 வரையில் உள்ளது. இதில் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் தடை பட்டியலில் இருந்து வெளியேறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications