சென்னை: தற்போது இந்தியாவில் நிலவி வரும் கடும் வெப்பம், நம்மை மட்டுமல்லாமல், நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் பாதிக்கிறது. அதிக வெப்பம் காரணமாக ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனைப் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
வெப்ப அலை தொடர்ந்து அடித்து வருவதால் உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகும் வாய்ப்புள்ளது. இதனால் பல இடங்களில் செல்போன் வெடிக்கும் ஆபத்து ஏற்படுகிறது. வெப்பம் பெருகுவதைத் தடுக்க கீழ்காணும் வழிமுறைகளை, நீங்கள் பின்பற்றலாம். இதன் விளைவாக ஸ்லோ பர்பாமென்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி வையுங்கள்: வெளியில் செல்லும்போது, நேரடி சூரிய ஒளியில் இருந்து உங்கள் ஃபோனை விலக்கி வைத்திருங்கள். காரின் டேஷ்போர்டு போன்ற சூடாகும் இடங்களிலும் வைக்க வேண்டாம்.
கவர் பயன்படுத்துங்கள்: உங்கள் ஃபோனுக்கான பேக் கவர்களைப் பயன்படுத்துங்கள். இது வெப்பத்தை கட்டுப்படுத்தி, உங்கள் ஃபோனை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். மூடியுள்ள கவர்களைத் தேர்ந்தெடுப்பதை விட, காற்று புகும் வகையிலான கவர்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
பேக்ரவுண்ட் ஆப்களை மூடுங்கள்: இதனை "background running apps" என்று ஆங்கிலத்தில் கூறுவர். பயன்படுத்தாத பேக்ரவுண்ட் ஆப்கள் ஃபோனின் வெப்பத்தை அதிகரிக்கும். எந்தச் செயலியையும் பயன்படுத்தவில்லை என்றால், அவற்றை உடனடியாக மூடி விடுங்கள்.
பிரைட்னஸ்-ஐ குறைக்கவும்: திரையின் ஒளி அதிகமாக இருப்பது, அதிக பேட்டரி ஆயுளை உபயோகிப்பதோடு, ஃபோனின் சூட்டையும் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப திரை ஒளியின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
மொபைல் டேட்டா மற்றும் புளூடூத் இணைப்பை துண்டியுங்கள்: வைஃபை இல்லாத இடங்களில் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும்போது, பேட்டரி அதிகம் பயன்படுத்தப்பட்டு ஃபோன் சூடாகும். தேவை இல்லாத நேரங்களில் மொபைல் டேட்டா மற்றும் புளூடூத் இணைப்பை துண்டித்து விடுங்கள்.
கேம்களை விளையாடுவதைத் தவிர்க்கவும்: கிராபிக்ஸ் திறன் அதிகம் உள்ள கேம்கள் ஃபோனை அதிகம் சூடாக்கும். வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கேம்களை விளையாடுவதைத் தவிர்க்கவும்.
நீண்ட நேரம் வீடியோக்களை பார்க்க வேண்டாம்: தொடர்ந்து வீடியோக்களைப் பார்ப்பதும் ஃபோனை சூடாக்கும். வெளியில் இருக்கும்போது, குறைவாகவே வீடியோக்களைப் பார்க்கவும்.
பேட்டரி சேமிப்பு முறையை (Battery Saver Mode) ஆக்டிவேட் செய்யுங்கள்: பல ஸ்மார்ட்போன்களில் பேட்டரி சேமிப்பு முறை (Battery Saver Mode) இருக்கும். இந்த முறையை ஆக்டிவேட் செய்வதன் மூலம், பின்னணி செயல்பாடுகள் குறைக்கப்பட்டு, பேட்டரி ஆயுள் அதிகரிக்கும் மற்றும் ஃபோனின் சூடும் குறையும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications