சென்னை: வெயில் கொளுத்துகிறதா? குளிர்ச்சிக்காக ஏசியை இயக்குறீங்களா? சரிதான்! ஆனால், 24 மணி நேரமும் ஏசியை இயக்குவது உங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், ஏசியை வெடிக்க வைக்கும் அபாயத்தையும் அதிகப்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தவறான பராமரிப்பு காரணமாக AC வெடிப்பு ஏற்பட்டு பெரும் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வெயில்காலத்தில், உங்கள் ஏசியை பாதுகாப்பாக இயக்க சில எளிய குறிப்புகளைப் பின்பற்றலாம்.
நொய்டாவில், ஒரு உயரமான கட்டிடத்தின் 10-வது மாடியில் ஏர் கண்டிஷனரின் உட்புறத்தில் ஷார்ட் சர்க்யூட் ஆனதைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு தீ விரைவாக அணைக்கப்பட்டாலும், இந்த சம்பவம் ஏர் கண்டிஷனர்களோடு தொடர்புடைய அபாயங்களை நமக்கு நினைவூட்டுகிறது. குறிப்பாக வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் போது, ஏசியை தொடர்ந்து இயக்குவது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் ஏசியை பாதுகாப்பாக இயக்குவதற்கு என்னென்ன டிப்ஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

வழக்கமான பராமரிப்பு: உங்கள் AC-ஐ தொழில்நுட்ப வல்லுநர் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பராமரிப்பு செய்யுங்கள். இதன் மூலம், தூசி மற்றும் அடைப்புகள் நீக்கப்பட்டு, AC சீராக இயங்கும். ஏசியின் உட்புறத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் காம்போனென்ட்கள் சரியாக இயங்குகிறதா மற்றும் சுத்தமாக உள்ளதா என்பதை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
காற்றோட்டம்: மனிதர்களுக்கு மட்டுமல்ல மெஷின்களுக்கும் போதுமான காற்றோட்டம் தேவை. AC வெளிப்புற யூனிட்டைச் சுற்றிலும் போதுமான இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காற்று சுதந்திரமாக பரிமாறிக்கொள்ள இடம் தேவை.
தெர்மோஸ்டாட் அமைப்பு: AC-யின் வெப்பநிலையை மிகக் குறைவாக அமைக்க வேண்டாம். 24 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை ஏசிக்கும், உங்கள் மின் கட்டணத்திற்கும் ஏற்றது.
இடைவெளி விட்டு ஏசியை இயக்கவும்: உங்கள் ஏசியை தொடர்ந்து இயக்க வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இது அதிக வெப்பம் மற்றும் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, தற்போதைய தீவிர வெப்ப நிலை காரணமாக உங்கள் ஏசி யூனிட்டுக்கும் வழக்கமான இடைவெளி கொடுங்கள் மற்றும் நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு இடைவிடாமல் இயக்குவதை உறுதி செய்ய டைமரை அமைத்து அதற்கேற்றவாறு இயக்குங்கள்.
ஏசி சர்வீசிங் மற்றும் வயரிங் பராமரிப்பு: ஒவ்வொரு 600 மணி நேர பயன்பாட்டிற்கு பிறகும், உங்கள் ஏசி யூனிட்டில், அதிக பயன்பாடு காரணமாக வயரிங் மோசம் அடையக் கூடும் என்பதால் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களின் சேவையை பெறவும். தேய்மானம் மற்றும் கிழிந்த வயரிங் காணப்பட்டால் உடனே அதை மாற்றி அதன் பின்பு ஏசியை இயக்குங்கள்.
சூரிய ஒளி தடை: வெளிப்புற யூனிட் மீது நேரடி சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டாம். நிழல் அமைத்து சூரிய ஒளியைக் குறைக்க முயற்சிக்கவும்.
உங்களைப் பயிற்றுவித்தல்: உங்கள் ஏசியின் அடிப்படை செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது மற்றும் சாதாரணமாக சுத்தம் செய்வது கசிவுகள் ஏதேனும் இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது போன்ற சிறு விஷயங்களையும் கவனியுங்கள். உங்களுக்கு இது போன்ற விவரங்கள் தெரியவில்லை என்றால் youtube வீடியோக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் நண்பரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: தீ அணைக்கும் கருவிகளை உங்கள் வீட்டில் வைத்திருங்கள். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற சிறு சிறு விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதால் பெரிய விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications