சென்னை: மே 1ஆம் தேதி முதல் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. வெயிலின் தாக்கம் காரணமாக, 24 மணி நேரமும் அனைவரது வீட்டிலும் ஃபேன் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் சிலர் தத்தளித்து வருகின்றனர். இதனால் ஏசி வாங்கலாம் என்ற முடிவில் இருக்கும் நபர்களுக்கு பட்ஜெட் சற்று யோசனையாக இருக்கலாம். ஆனால் இனி உங்களுக்கு அந்த கவலை இல்லை. உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் ஒரு ஏசியை நீங்கள் வாங்கலாம். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பட்ஜெட் விலைக்கு ஏற்ற ஒரு குட்டி ஏசியை அறிமுகம் செய்துள்ளனர். அதன் பெயர் வால் மௌண்ட் ஏர்கூலர் (Wall Mount Air - Cooler) சாதனம். இது மினி ஏசி (Mini AC) போன்ற சாதனம். ஆனால் இது ஒரு ஏர் கூலர் தான்.

இதன் விலை ரூ.12,000 முதல் 15,000த்திற்குள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை, அது விற்கப்படும் இ-காமர்ஸ் தளங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே ரூ. 30,000 முதல் விற்கப்படும் ஏர் கண்டிஷனர்களை வாங்குவதற்கு யோசிக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு, இதுபோன்ற விலை குறைந்த ஏர் கூலர்கள் சிறந்தத் தேர்வாக இருக்கும். இது பயன்படுத்த மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் ஏசி போலவே தோன்றுகிறது.
இந்த வால் மௌண்டெட் ஏர் கூலர்கள், சுவரில் மாட்டப்படும் வசதியுடன் வருகிறது. இதே போன்ற ஏசியின் அனுபவத்தை வழங்கும் ஏர் கூலர்கள் நிறைய உள்ளன. ஆனால் அவை ரோலிங் வசதியுடன் கூடிய டேபிளில் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால் உங்களுடைய வீட்டில் வைக்கும் போது, ஒரு பெரிய இடம் தேவைப்படலாம். ஆனால் இது போன்ற சுவரில் மாட்டப்படும் ஏர் கூலர்களுக்கு, எந்தவித இட வசதியும் தேவையில்லை.
இந்த ஏர் கூலர் சாதனத்தை, சிம்பொனி பிராண்ட் தயாரித்து ஏழை மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைத்துள்ளது. இது 1 வருட வாரண்டியுடன் வருகிறது. மேலும் இது 15 லிட்டர் தண்ணீர் டேங்க் உடன் வருகிறது மற்றும் 57 கியூபிக் மீட்டர்கள் அளவு கொண்ட அறையை இதனை வைத்து எளிதில் குளுமைப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து ஏர்கூலர்களைப் போலவே இதிலும் ஈரக்காற்று வீசும் என்று நீங்கள் யோசிக்கலாம், ஆனால் இந்த வகை ஏர்கூலர்களில், அதுபோன்ற பிரச்சனை வராது. ஏனென்றால் எலக்ட்ரானிக் ஹுமிடிட்டி கண்ட்ரோல் இருப்பதால், ஈரப்பதம் அல்லாத குளிர்ந்த காற்றை நீங்கள் அனுபவிக்க முடியும்.
இந்த ஏர் கூலர்கள் எக்ஸ்டர்னல் வாட்டர் டேங்க் உடன் வருகிறது. அதாவது உங்கள் வீட்டில் உள்ள ஏதேனும் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி டியூப் வழியாக இந்த சாதனத்திற்கு அனுப்பலாம். அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற கவலையும் வேண்டாம். இந்த வால் மௌண்டெட் ஏர்கூலர்கள் மறுசுழற்சி செய்யும் வசதியுடன் வருகிறது. பட்ஜெட் இடிக்கும் நபர்களுக்கு இதுபோன்ற ஏர்கூலர்கள் ஏசியைப் போலவே குளிர்ந்த காற்றை, இந்த கோடை மாதங்களில் அனுபவிக்க உதவுகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications