சென்னை: வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது, ஒவ்வொரு வரி செலுத்துபவருக்கும் முக்கியமான கடமையாகும். அபராதத்தை தவிர்க்கவும் மற்றும் வரி விதிகளுக்கு உட்படுவதை உறுதி செய்யும் வகையில் ITR காலக்கெடுவை அறிந்திருப்பது முக்கியம். 2023-24 நிதியாண்டில், வெவ்வேறு வகை வரி செலுத்துவோருக்கு, வெவ்வேறு ITR காலக்கெடு உள்ளது. இந்த காலக்கெடுவை அறிந்துகொள்வது, உங்கள் ITR-ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்ய உதவும்.
சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்வது ஏன் முக்கியமானது?: உங்கள் ITR- ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வது அபராதங்களைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் கடமையை எவ்வவளவு முனைப்புடன் செய்திருக்கிறீர்கள் என்பதை பறைசாற்றுகிறது. பல்வேறு வகையான வரி செலுத்துவோருக்கு அவர்களின் வருமானத்தின் அடிப்படையில், அரசாங்கம் வெவ்வேறு ITR காலக்கெடுவை வழங்கியுள்ளது. இந்த காலக்கெடுவைத் தவறவிட்டால் அபராதங்கள் விதிக்கப்படலாம், எனவே உங்களுக்குப் பொருந்தும் குறிப்பிட்ட ITR காலக்கெடுவைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.

தனிநபர்கள், HUFகள், AOPகள் மற்றும் BOIகளுக்கான ITR காலக்கெடு: தனிநபர்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFகள்), AOPகள் மற்றும் BOIகள், 2024ஆம் நிதியாண்டிற்கான ITR-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும். இது பெரும்பாலான தனிப்பட்ட நபர்கள் வரி செலுத்துவதற்கான காலக்கெடுவாகும்.
வணிகர்களுக்கான ITR காலக்கெடு: ஒரு நபர் நிறுவனங்கள் (OPCs), LLPகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற ஆடிட்டிங் அறிக்கை தேவைப்படும் நிறுவனங்கள் அனைத்தும் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னர் தங்களின் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும்.
உலக வர்த்தக (international) அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு (domestic) தொழிலில் ஈடுபட்டு, டிரான்ஸ்பர் பிரைசிங் அறிக்கைகள் (transfer pricing reports) தேவைப்படும் நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட காலக்கெடு உள்ளது. இந்த நிறுவனங்கள் தங்கள் வருமான வரி கணக்கை நவம்பர் 30, 2024-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
ரிவைஸ்ட் (திருத்தப்பட்ட) ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு: உங்களின் அசல் ITR-இல், நீங்கள் திருத்தங்களைச் செய்ய வேண்டுமானால், திருத்தப்பட்ட ITR-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2024 ஆகும். இது வரி செலுத்துவோர் தங்கள் ஆரம்ப வரிக் கணக்கில், ஏதேனும் பிழைகள் அல்லது குறைபாடுகளை சரிசெய்ய உதவுகிறது.
தாமதமான ITR தாக்கல் காலக்கெடு: ஜூலை 31, 2024 அன்று அசல் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் தாமதமாக ITR தாக்கல் செய்யலாம். தாமதமான ITR-ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2024 ஆகும். தாமதமாக ITR தாக்கல் செய்வதற்கு அபராதம் மற்றும் செலுத்தப்படாத வரித் தொகைகளுக்கு வட்டியும் சேர்த்து விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications