ஜியோ பயனர்களே.. ரீசார்ஜ் கட்டண உயர்வுக்கு முன் 50 திட்டங்கள் வரை ஸ்டாக் வைக்கலாம்! எப்படி தெரியுமா?

ஜூலை 3-ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த உள்ளன. இந்த கட்டணங்கள் சுமார் 25 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இதில் ஜியோ ஒரு வசதியான வாய்ப்பை வழங்குகிறது. அது என்னவென்றால் முன்னதாகவே நாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். உங்களுடைய தற்போதைய கட்டணம் காலாவதியான, பிறகு நீங்கள் ரீசார்ஜ் செய்துள்ள திட்டம் அடுத்ததாக ஆக்டிவேட் செய்யப்படும்

ஜூலை 3-ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில திட்டங்கள் காலாவதியாக உள்ளது. இதில் ஜியோவின் தனி சிறப்பு என்னவென்றால் பயனர்களுக்கு, தற்போதைய திட்டங்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

 ஜியோ பயனர்களே.. ரீசார்ஜ் கட்டண உயர்வுக்கு முன் 50 திட்டங்கள் வரை ஸ்டாக் வைக்கலாம்! எப்படி தெரியுமா?

வாடிக்கையாளர்கள் ஜூலை 3-ஆம் தேதிக்கு முன்னரே ரீசார்ஜ் செய்தால், அத்திட்டம் முடியும் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜூலை 3-ஆம் தேதிக்குப் பிறகு ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் பொருந்தும்.

ஜியோ பயனர்கள் 50 ரீசார்ஜ் திட்டங்கள் வரை ஸ்டாக்கில் வைத்துக் கொள்ளலாம். இந்த தனித்துவமான விருப்பத்தை வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது நீங்கள் ஏற்கனவே ஒரு திட்டத்தினை, ரீசார்ஜ் செய்து மீண்டும் இன்னொரு திட்டத்தினை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய தற்போதைய திட்டம் முடிவடைந்த பிறகு, நீங்கள் ரீசார்ஜ் செய்த இன்னொரு திட்டம் ஆக்டிவேட் செய்யப்படும். இதனை நீங்கள் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஒரு ஆண்டு என எந்தத் திட்டத்தை வேண்டுமானாலும் குவித்து வைத்துக் கொள்ளலாம்.

பின்வரும் ஐந்து திட்டங்களும் ஜூலை 3-ஆம் தேதி அன்று காலாவதியாகிவிடும், பணத்தை சேமிக்க விரும்புவர்களுக்கு இந்த 5 திட்டம் பயனுள்ளதாக இருக்கும், நீங்கள் ஜூலை 3 ஆம் தேதிக்கு முன்னரே இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொண்டால் பணத்தை சேமிக்கலாம்.

1. ஜியோ 155 பிளான்: இது ஒரு மாதத்திற்கு மொத்தம் 2 ஜிபி லிமிடெட் டேட்டாவை கொண்டுள்ளது. இந்த திட்டம் 4ஜி ஃபோன்களைக் கொண்ட பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஜூலை 3-ஆம் தேதிக்குப் பிறகு, இது ரூ. 189-ஆக உயரவுள்ளது

2. ஜியோ 299 பிளான்: ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள். ஜூலை 3ஆம் தேதிக்குப் பிறகு, இந்தத் திட்டம் ரூ.349 ஆக உயரவுள்ளது.

3. ஜியோ 533 பிளான்: ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜூலை 3-ஆம் தேதி முதல், இதன் விலை ரூ. 629 ஆக உயர்கிறது.

4. ஜியோ 749 பிளான்: ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவுடன் 90 நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது மற்றும் அன்லிமிடெட் 5ஜி-யை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் கூடுதலாக 20 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

5. ஜியோ 2999 பிளான்: ஒரு நாளைக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி-யை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இது செலவு குறைந்த வருடாந்திர திட்டமாகும். ஜூலை 3-ஆம் தேதிக்குப் பிறகு, இது ரூ. 3599 ஆக உயர்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+