சென்னை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பலர் ஏசி வாங்கலாம் என்ற முடிவில் இருப்பீர்கள். ஆனால் வாங்குவதற்கு பட்ஜெட் சற்று யோசனையாக இருக்கலாம். இனி நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ரூ. 1000 ரூபாய்க்கு குறைவாக, நீங்கள் ஏசி வாங்கலாம். இந்தப் பதிவில் அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
"பங்குனி வெயில் பல்லக்காட்டி அடிக்குது" என்ற பழமொழிக்கு ஏற்பக் கோடை வெயில் சுட்டரிக்கும் இந்த நேரத்தில், 24 மணி நேரமும் ஃபேன்-ஐ ஆன் செய்து வைத்திருக்க வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, அனைவருக்கும் உதவும் வகையில், உங்களுடைய பட்ஜெட்டில் ஏசி வாங்க, அமேசான்-இல் பல மினி ஏசிகள் விற்பனைக்கு வந்துள்ளன. அவை சுமார் ரூ. 350 ரூபாய் முதல் ரூ. 1000 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கோடை காலம் வந்துவிட்டாலே, ஏசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரே குஷி தான். ஏனென்றால் அவர்களுக்கு இந்த கோடை நாட்களில் விற்பனைகள் அதிகரிக்கும். சிலருக்கு ஏசிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முடியாமல் இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த மினி ஏசி ஃபேன்களை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்கள் அறிமுகம் செய்துள்ளன.
Mini Cooler AC USB and Battery Operated Air Mini Water Air Cooler Cooling Fan: இந்த வகை மினி கூலிங் ஃபேன்கள், ரூ. 449 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. சில நிறுவனங்கள் இதனை ரூ. 450 ரூபாய்க்கும், சில நிறுவனங்கள் இதனை ரூ. 500 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றன. இதன் மூலம் நீங்கள் மின்சார செலவை சேமிக்கலாம். இந்த வகை மினி ஃபேன்களை யூஎஸ்பி பேட்டரி கொண்டு நீங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
போர்ட்டபிள் டிசைன் என்பதால், நீங்கள் உங்களுக்கு பிடித்த அறைகளில் இதனை வைத்துக் கொள்ளலாம். இது போன்ற பல மாடல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளன. அவை சின்ன டேபிள்களில் வைப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.
ஹைட்ரோ-சில் டெக்னாலஜி மற்றும் டூயல் கூலிங் ஜெட் மூலம் கூலிங் கன்ட்ரோலைக் கொண்டுள்ளது. இது உங்களைச் சுற்றியுள்ள காற்றை குளிர்விக்கவும், ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. இதன் டாப்-ஃபில் டேங்கில் தண்ணீரை ஊற்றினால் ஏசி போன்ற காற்றை அனுபவிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்து வைக்கும் பட்சத்தில், 10 மணி நேரம் வரை குளிர்ந்த காற்றைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை.
அதிகப் பணத்தை செலவு செய்து ஏர் கண்டிஷனர்களை வாங்குவதை விட, இது போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். மேலும் மின்சாரக் கட்டணத்தை சேமிக்க உதவுகிறது.


Click it and Unblock the Notifications