இந்தியாவில் சில அயல்நாட்டுப் பழங்கள் வேகமாக பிரபலமடைந்து வருவதை தெரிந்து கொண்டு பழ சாகுபடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் ஒரு விவசாயியை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். சமீபத்திய நாட்களாக மாடித்தோட்டம் அமைத்து அதில் டிராகன் பழங்கள் மற்றும் பிற விலை உயர்ந்த பழங்களை சாகுபடி செய்து அதில் நல்ல வருமானம் பெறுபவர்களின் கதைகள் குறித்து வெவ்வேறு பதிவுகளில் பார்த்தோம். இதே போல அயல்நாட்டு பழங்களின் சாகுபடியில் ஈடுபட்டு லாபம் பார்த்துக் கொண்டிருப்பவர் தான் பரமேஸ்வரர் தோரட்.
2018 ஆம் ஆண்டில் மாதுளை பழங்களுக்கு குறைந்த விலையே சந்தையில் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டார் பரமேஸ்வர். இதனால் மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் எந்தெந்த பழங்களை நடவு செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். டிராகன் பழம், அத்திப்பழம் போன்ற அயல்நாட்டு பழங்கள் இந்தியாவில் அதிகம் பிரபலமடைந்து வருகின்றன.

பாரம்பரிய இந்திய பழங்களான திராட்சை, ஆரஞ்சு, பப்பாளியை விட 3 முதல் 4 மடங்கு அதிக விலையில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. பல விவசாயிகள் உள்ளூர் தட்பவெட்ப நிலையைப் பொறுத்து பயிரிட்டு வருகின்றனர். இதன் காரணமாக வேறு எந்த பழத்தை சாகுபடி செய்து லாபம் பார்க்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
அப்படி ஆய்வு செய்து பரமேஸ்வர் கண்டறிந்தது தான் அவகேடோ பழ சாகுபடி. இந்தியாவில் அவகேடோ பழங்கள் ஒன்று 150 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 39 லட்சம் கிலோ அவகேடோ பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இவை பெரும்பாலும் தான்சானியா, நியூசிலாந், பெரு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, அவகேடோ பழங்களில் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது. அவகேடோ பழத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.
வறண்ட நிலத்தில் அவகேடோ சாகுபடி: அவகேடோ தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்ளும் தாவரமாகும். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் உள்ள பீட் பகுதி அடிக்கடி வறட்ச்சிக்கு உள்ளாகிறது. இருப்பினும் பரமேஸ்வரர் தனது ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹார்ட்டிகல்சுரல் ரிசர்ச் பெங்களூரு உருவாக்கிய அதிக மகசூல் தரும் அவகேடோ வகையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்.
அப்படி அவர் கண்டுபிடித்தது தான் ஆர்கா சுப்ரீம் என்ற அவகேடோ வகை. இவை 40 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழை பொழிவு உள்ள பகுதிகளிலும் செழித்து வளரும் என்று பரமேஸ்வர் கண்டறிந்தார்.
அப்போது கர்நாடகாவில் ஏற்கனவே ஆர்கா சுப்ரீம் சாகுபடி செய்து வரும் விவசாயியையும் பரமேஸ்வர் சந்தித்துள்ளார். இந்த மரங்கள் நன்றாக வளர்ந்து இருந்தால் ஒரு மரம் சுமார் 175 முதல் 200 கிலோ வரை மகசூல் தருகிறது. சராசரியாக 350 முதல் 400 கிராம் வரை ஒரு பழத்தின் எடை இருக்கும். எனவே இந்த வகை அவகேடோ பழங்கள் தன் கிராமத்தில் செழிப்பாக வளரும் என்று பரமேஸ்வர் நம்ப ஆரம்பித்தார். பட்டப்படிப்புக்கு பிறகு விவசாயத்தில் டிப்ளமோ முடித்த பரமேஸ்வர் என்ன நடந்தாலும் சரி இந்த வகை அவை அவகேடோ பழங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
மகாராஷ்டிராவில் அவகேடோ பழங்களை சாகுபடி செய்ய ஆரம்பித்த முதல் விவசாயி பரமேஸ்வர் தான். பெங்களூரு IIHR-இல் சோதனை அடிப்படையில் 50 மரக்கன்றுகளை மட்டுமே ஆரம்பத்தில் வாங்கினார். அதன் பிறகு 0.75 ஏக்கர் நிலத்தில் இரண்டடிக்கு ஒரு குழியை தோண்டி மரக்கன்றுகளை நடுவதற்கு முன்பு மாட்டு சாணத்தை நிரப்பியுள்ளார்.
மழைக்காலங்களிலும், ஜூன் முதல் ஜூலை மாதங்களிலும் நடப்படுகிறது. எனவே ஜூன் 2018 ஆம் ஆண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளார் பரமேஸ்வர். அவருடைய பண்ணையிலேயே ஒரு குளமும் உள்ளது. அது மழை நீரை உறிஞ்சி வறண்ட நிலங்களில் பயன்படுத்த உதவுகிறது. இந்த மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீரை நம்பி இருக்க வேண்டிய தேவையை குறைத்துள்ளது.
மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் இந்த தண்ணீரை பயன்படுத்த தொடங்கியுள்ளார் பரமேஸ்வரர். ஏனென்றால் குளிர்கால மாதங்களான டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நீர் பாசனம் தேவையில்லை. இதன் காரணமாக மற்ற மாதங்களில் குளத்தை நம்பி தொடங்கியுள்ளா.ர் வெளிநாட்டு பழங்களைப் போல் இன்றி ஒரு ஆர்கா மரம் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை 25 முதல் 30 லிட்டர் குறைந்த தண்ணீர் தான் எடுத்துக் கொள்ளும்.
இதை தெரிந்து கொண்டு தனது பண்ணையில் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தியுள்ளார். இதர சத்துக்களையும் நேரடியாக மரத்தின் வேர்களில் போட்டுள்ளார். பிப்ரவரி மாதம் பூக்கள் பூக்க தொடங்கி, ஜூன் ஜூலையில் அறுவடைக்கு தயாராகும். இரண்டாவது அறுவடை டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் கிடைக்கும். பரமேஸ்வரின் 50 செடிகளும் 2021-ஆம் ஆண்டில் பூக்க ஆரம்பித்து அறுவடைக்கு தயாராகின. முதல் வருடம் அறுவடை குறைவாக இருப்பதால் ஒவ்வொரு செடியும் நான்கைந்து அவகேடோ பழங்களை மட்டுமே கொடுத்தது. ஆனால் 2022-ஆம் ஆண்டில் ஒரு மரத்திற்கு 20 கிலோ வரை மகசூல் கிடைத்தது. கடந்த சீசனில் மட்டும் 1000 கிலோ அவகேடோ பழங்களை அறுவடை செய்து வெறும் 50 மரங்கள் மூலம் ரூ.6 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்ததாக கூறுகிறார் பரமேஸ்வர்.
தற்போது ரீடைல் விற்பனையாளர்களுக்கும் 1 அவகேடோ பழத்தை ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார். மொத்த விற்பனையாளர்களுக்கு 1 கிலோ 600 ரூபாய்க்கு வழங்கி வருகிறார். அதோடு தேசிய சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து விற்பனையை பெருக்கி வருகிறார். இவர் அவகேடோ பழங்கள் மட்டுமின்றி கிராஃப்டிங்கும் செய்து வருகிறார். 2 வெவ்வேறு செடிகளைப் பயன்படுத்தி ஒரே செடியின் மூலம் பலன்களை பெறுவது தான் கிராஃப்ட்டிங்.
கிராஃப்டிங் மூலம் 250 செடிகளை உருவாக்கி அதை 1.5 ஏக்கரில் பயிரிட்டுள்ளார். இதில் 2200 செடிகளை 2024 ஆம் ஆண்டில் மட்டும் விற்பனை செய்துள்ளார். நர்சரி பிசினஸ் மூலம் 6.6 லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளது. இதில் 4.4 லட்ச ரூபாய் வரை செடிகளை விற்பதன் மூலம் கிடைத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications