கொரோனா 2.0: விமான, ரயில் சேவை ரத்து.. முடங்கியது பெய்ஜிங்..!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்-ல் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று பிற நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பரவக் கூடாது என்பதற்காகப் பெய்ஜிங் நகருக்கு இயக்கப்பட்டும் அனைத்து ரயில் மற்றும் விமானச் சேவைகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.

புதன்கிழமை காலையில் வெளியான தகவல்கள் படி சீன தலைநகர் பெய்ஜிங்-ல் புதிதாக 31 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்துள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 90,000 பேருக்குக் கொரோனா தொற்று குறித்துப் பரிசோதனை செய்துள்ளது பெய்ஜிங்.

ஏற்கனவே சீன அதிகாரிகள் கொரோனா 2.0வில் தொற்றுக்களின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள நிலையில், அதிரடி நடவடிக்கையாக விமானம் மற்றும் ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தியுள்ளது சீன அரசு.

விமானச் சேவை

விமானச் சேவை

பெய்ஜிங்-ல் தற்போது மொத்தமாக 132 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நகரில் இருக்கும் 2 விமான நிலையத்தில் சுமார் 1,255 உள்ளூர் விமானங்களின் பயணங்களை ரத்து செய்துள்ளது, இதில் 70 சதவீத முன்பதிவு பயணங்களும் அடக்கம்.

இதேபோல் பெய்ஜிங்-ல் இயக்கப்படும் சர்வதேச விமானச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரயில்வே சேவை

ரயில்வே சேவை

சீனாவின் தேசிய ரயில் சேவை அமைப்பு, செவ்வாய்க்கிழமை வரையில் மட்டுமே பெய்ஜிங் மக்களுக்கு ரயில் சேவையை அளித்து. இதன் பின்பு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் அனைத்திற்கும் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் பணத்தை ரீபண்ட் செய்வதாக அறிவித்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகள்

பள்ளி மற்றும் கல்லூரிகள்

மேலும் பெய்ஜிங்-ல் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் கல்வியைத் துவங்க சீன அரசு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் வீட்டில் முடங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

 

எமர்ஜென்சி

எமர்ஜென்சி

சீன அரசு கொரோனா தொற்று தொடர்ந்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பெய்ஜிங் மாகாணத்தில் எமர்ஜென்சி அளவீட்டை 2ஆம் நிலையில் இருந்து 3ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது சீன அரசு. இதனால் பெய்ஜிங் மக்கள் உச்சக்கட்ட பயத்தில் உள்ளனர்.

கொரோனா 2.0

கொரோனா 2.0

சீனாவில் கொரோனாவில் 2வது அலை எப்படி..? எங்குத் துவங்கியது தெரியுமா..?

 

எல்லையில் சண்டை

எல்லையில் சண்டை

ஒருபக்கம் நாட்டின் தலைநகரின் தலையெழுத்து என்னவென்று தெரியாமல் இருக்கும் சீனா, மறுபக்கம் இந்திய எல்லையில் தேவையில் இல்லாமல் இந்திய ராணுவத்துடன் பிரச்சனை செய்து வருகிறது.

சீன - இந்திய ராணுவ வீரர்கள் சண்டை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? சீனாவுடன் போர் வந்தால் இந்தியா எதிர்க்க முடியுமா..? உங்கள் பதிலை கமெண்ட் பதிவிடும் இடத்தில் பதிவிடுங்கள்

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+