கொரோனோ தடுப்பு மருந்தின் விலை இதுதான்.. உண்மையை வெளியிட்ட பெல்ஜியம் அமைச்சர்..!

பெல்ஜியம் நாட்டின் பட்ஜெட் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஈவா டி பீல்கர், தனது டிவிட்டரில் கொரோனா தடுப்பு மருந்தின் உண்மையான விலையை வெளியிட்டு மருத்து நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்,

இந்த டிவீட்டில் கொரோனா மருத்து தயாரிக்கும் 6 நிறுவனங்கள் ஐரோப்பிய அரசுக்கு விற்பனை செய்யும் விலையைப் பட்டியலை அப்படியே வெளியிட்டதால் அரசுக்கும், மருந்து நிறுவனங்களுக்குமான ரகசிய ஒப்பந்தம் உடைந்துள்ளது.

ஈவா டி பீல்கர்-ன் இந்த டிவீட்-ஆல் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், உலக நாடுகளில் இருக்கும் பார்மா நிறுவனங்கள் கோபம் அடைந்துள்ளது.

Pfizer குற்றச்சாட்டு

Pfizer குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பு மருத்துத் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் Pfizer நிறுவனம் ஈவா டி பீல்கர் மீது இரகசிய தன்மையை உடைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை மிகலும் ரகசியமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என Pfizer நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மார்டெனா மருந்து விலை அதிகம்

மார்டெனா மருந்து விலை அதிகம்

ஈவா டி பீல்கர் வெளியிட்டுள்ள இந்த விலைப் பட்டியலில் ஆக்ஸ்போர்ட்/அஸ்ட்ரா ஜெனேகா மருத்து தான் மிகவும் குறைவானது, இதேபோல் மார்டெனா நிறுவனத்தின் மருந்து விலை உயர்ந்த ஒன்றாக உள்ளது.

மருந்து நிறுவனங்களுக்குப் பின்னடைவு

மருந்து நிறுவனங்களுக்குப் பின்னடைவு

ஐரோப்பியச் சந்தையில் விற்பனை செய்யப்படும் கொரோனா மருந்தின் விலை உலக நாடுகள் தெரிந்துகொண்ட நிலையில், மருத்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உலக நாடுகள் குறைவான விலைக்கு வாங்க முடியும்.

இது மருந்து நிறுவனங்களுக்குத் தற்போது பின்னடைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விலை பட்டியல்

விலை பட்டியல்

ஈவா டி பீல்கர் வெளியிட்டுள்ள கொரோனா மருத்தின் விலை பட்டியல்

  • ஆக்ஸ்போர்ட்/அஸ்ட்ரா ஜெனேகா - 1.78
  • யூரோ - 160.60 ரூபாய்
  • ஜான்சன் & ஜான்சன் - 8.50 டாலர் - 625 ரூபாய்
  • சனோபி/ஜிஎஸ்கே - 7.56 யூரோ - 682 ரூபாய்
  • Pfizer/பயோஎன்டெக் - 12 யூரோ - 1082 ரூபாய்
  • க்யூர்வேக் - 10 யூரோ - 902 ரூபாய்
  • மார்டெனா - 18 டாலர் - 1,325 ரூபாய்

 

பெல்ஜியம் அரசு

பெல்ஜியம் அரசு

இந்த விலை நிலவரத்தில் பெல்ஜியம் அரசு சுமார் 33 மில்லியன் தடுப்பூசியைச் சுமார் 279 மில்லியன் யூரோவுக்கு வாங்க உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ள நிலையில் பிரிட்டன் தனியாகச் சுமார் 7 நிறுவனங்களிடம் இருந்து 357 மில்லியன் தடுப்பூசியை வாங்க உள்ளது. இதில் ஆக்ஸ்போர்ட்/அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்திடம் இருந்து மட்டும் சுமார் 100 மில்லியன் தடுப்பூசியை வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவின் நிலை

இந்தியாவின் நிலை

இந்தியாவில் முதல்கட்ட கொரோனா தடுப்பு மருந்துக்காக, கோவேக்ஸ் உலகளாவிய தடுப்பு மருத்துப் பகிர்வு திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியுதவியைத் தாண்டி மத்திய அரசு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 1.8 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டும் என GAVI அமைப்பு தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

30 கோடி இந்திய மக்கள்

30 கோடி இந்திய மக்கள்

இன்றைய அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் படி 1.8 பில்லியன் டாலர் என்றால் 13219.2 கோடி ரூபாய். இந்தத் தொகை மற்றும் கோவேக்ஸ் அமைப்பின் உதவி மூலம் 30 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து போட முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+