பெல்ஜியம் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட குடும்ப நிறுவனமான கொல்ரைட் குழுமம் (Colruyt Group), தமிழ்நாட்டின் புதிய ஐடி நகரமாக உருவெடுத்திருக்கும் கோயம்புத்தூரில் உள்ள KCT டெக் பார்க்கில் தனது இரண்டாவது இந்திய ஐடி குளோபல் திறன் மையத்தை (IT - GCC) திறந்துள்ளது.
ஹைதராபாத்தில் ஏற்கனவே கொல்ரைட் குழுமம் தனது ஐடி அலுவலகத்தை அமைத்திருக்கும் நிலையில், இந்தியாவில் இந்நிறுவனத்தின் இரண்டாவது அலுவலகத்தைக் கோயம்புத்தூரில் அமைத்துள்ளது.

கொல்ரைட் குழுமம்: 1928 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் கொல்ரைட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த குழுமம், இன்று பெல்ஜியத்தின் ரீடைல் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வர்த்தக சாம்ராஜ்ஜியமாகும். Colruyt என்ற பட்ஜெட் சூப்பர் மார்க்கெட் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. இக்குழுமம் OKay, Bio-Planet, DATS 24, DreamLand, DreamBaby போன்ற துணை நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறது.
பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் luxembourg ஆகிய நாடுகளில் இயங்கி வரும் கொல்ரைட் குழுமத்தின் தலைமை அலுவலகம் ஹாலே (Halle) நகரில் அமைந்துள்ளது. 220 க்கும் மேற்பட்ட கடைகளை பெல்ஜியத்தில் கொண்டிருக்கும் கொல்ரைட் சூப்பர் மார்க்கெட்டுகள் தான் இக்குழுமத்தின் பிரதான வியாபாரமாக உள்ளது. ரீடைல் தாண்டி ஐடி துறையில் கொல்ரைட் குழுமம் இயங்கி வருகிறது.
கொல்ரைட் ஐடி வர்த்தகம்: கொல்ரைட் குழுமம் இந்தியாவில் 2007 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் தனது முதல் இந்திய ஐடி டெவலப்மென்ட் சென்டரை நிறுவியது. தற்போது 650 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. "கொல்ரைட் ஐடி கன்சல்டன்சி இந்தியா பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் அப்போது துவங்கப்பட்ட இந்த ஐடி டெவலப்மென்ட் சென்டர், தற்போது "கொல்ரைட் குரூப் இந்தியா" என அழைக்கப்படுகிறது. கொல்ரைட் குரூப் இந்தியா தற்போது கன்சல்டிங், கட்டுமானம், இன்னோவேஷன், ஆப்ரேஷன்ஸ் போன்ற பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.

கோயம்புத்தூர் டெக் பார்க்: கோயம்புத்தூரில் உள்ள KCT டெக் பார்க்கில் தான் தற்போது கொல்ரைட் குரூப் இந்தியா தனது புதிய ஐடி ஜிசிசி அலுவலகத்தைத் திறந்துள்ளது. KCT டெக் பார்க் என்பது கோயம்புத்தூரின் ஐடி துறை நிறுவனங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) ஆகும்.
நவீன கட்டமைப்புகள், தடையற்ற இணைப்பு வசதிகள் மற்றும் உயர் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த KCT டெக் பார்க், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே இப்பகுதியில் வரும் வேளையில் தற்போது பெல்ஜியம் நாட்டின் கொல்ரைட் குழுமம் (Colruyt Group) அலுவலகத்தைத் திறந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications