சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளில் 210 ரயில் பெட்டிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை BEML நிறுவனம் பெற்றுள்ளது .சென்னையில் இரண்டாம் கட்டமாக 116 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்த புள்ளியில் BEML நிறுவனம் குறைந்த அளவிலான தொகையை குறிப்பிட்டு ஒப்பந்தத்தை பெற்றுள்ளத. இதன்படி இந்த நிறுவனம் 210 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்க இருக்கிறது. இந்த புதிய ரயில் பெட்டிகள் மாதவரம் - சிறுசேரி சிப்காட் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான ரயில் பாதையில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது .

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக லைன் 3இல் மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.4 கிலோ மீட்டருக்கும், லைன் 5இல் 44.6 கிலோமீட்டர் தொலைவிற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியது. ஜூலை 2021 முதல் மே 2022 வரையில் இந்த ஒப்பந்த புள்ளி கோரும் பணிகள் நடைபெற்றன. ஆனால் ஜூன் 2022இல் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தங்களை ரத்து செய்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் குறித்து அறிவிப்பினை மீண்டும் வெளியிட்டது. இதற்கான தொழில் நுட்ப ரீதியான ஒப்பந்தம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இதன்படி BEML மற்றும் டிட்டாகர் ரயில் சிஸ்டம் ஆகிய நிறுவனங்கள் 21.84 வருட காலம் கொண்ட ஒப்பந்தங்களை கோரி இருந்தது . இதில் 15 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பராமரிப்பும் அடங்கும்.
BEML நிறுவனம் ஒரு பெட்டிக்கு 14.7 கோடி ரூபாய் என்ற அளவில் ஒப்பந்த புள்ளி கோரியதாகவும் டிட்டாகர் ரயில் சிஸ்டம் நிறுவனம் 15.6 கோடி ரூபாய் என ஒரு பெட்டிக்கு ஒப்பந்தம் கோரியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் குறைந்தபட்சமாக கோரிய BEML நிறுவனத்திற்கு தான் ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்படி BEML நிறுவனம் இந்த இரண்டு புதிய பாதைகளிலும் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் பெட்டிகளை வடிவமைப்பது, தயாரிப்பது ,சோதனை செய்வது, மேலும் இதனை இயக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது, இந்த பெட்டிகளை அடுத்த 15 ஆண்டு காலத்திற்கு பராமரிப்பது ஆகிய அனைத்திற்கும் பொறுப்பாகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications