இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்தத்திலிருந்து மக்கள் RTGS மற்றும் NEFT போன்ற டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவது மிகவும் பொதுவான ஒன்றாகிவிட்டது. ஆனால் தவறான கணக்கு விவரங்களை வழங்குதல் அல்லது மோசடி நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பணம் வேறு ஒரு கணக்கிற்கு சென்று விடுகிறது. இந்தச் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதால் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஆர்பிஐ அறிமுகப்படுத்தவுள்ள இந்த புதிய வசதியின் மூலம் பணம் அனுப்புபவர்கள் பணம் பெறுபவர்களின் பெயரைச் சரி பார்க்க முடியும். இதன் மூலம் பிழைகள் எதுவுமின்றி, மேலும் அபாயங்களை குறைத்து சரியான நபர்களுக்கு பணம் அனுப்பலாம். இந்த புதிய அம்சம் 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ், இம்மிடியேட் பெமென்ட் சர்வீஸ் சிஸ்டம் போன்றவை பணம் அனுப்புபவர்களை பணம் பெறுபவர்களின் பெயரைச் சரிபார்க்க அனுமதிக்கின்றன. அதேபோல RTGS மற்றும் NEFT இயங்குதளங்களிலும் பயனாளரின் பெயரைச் சரி பார்க்கும் அம்சம் வெளியாகவுள்ளது.

இந்த புதிய சரிபார்ப்பு வசதியை உருவாக்கி செயல்படுத்தித் தருமாறு நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இந்த புதிய அம்சம் தயாரானதும் அனைத்து வங்கிகளுக்கும் இவை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் பிளாட்பார்ம்கள் உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய வசதியைப் பெறலாம். கூடுதலாக பரிவர்த்தனைகளை தொடங்குவதற்கு அந்தந்த வங்கிகளின் கிளைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை செலுத்தும் முன் பயனாளிகளின் கணக்கு விபரங்களை சரிபார்க்க முடியும்.
முக்கிய நன்மைகள்:
பரிவர்த்தனையின் துல்லியத்தை மேம்படுத்தலாம்: பணம் அனுப்புபவர்கள் பணம் செலுத்துவதற்கு முன் பெறுநரின் பெயரை உறுதிப்படுத்த இந்த புதிய அம்சமும் உதவும். இதனால் தவறான கணக்கு விபரங்களால் ஏற்படும் பிழைகளை குறைக்கலாம்.
பாதுகாப்பை மேம்படுத்தல்: நிகழ்நேர கணக்கு தகவல்களைச் சரி பார்ப்பதன் மூலம் மோசடியாக பணம் சென்றடைவதை குறைக்கலாம்.
இந்த நடவடிக்கையால் இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் தளங்களை மேம்படுத்த முடியும். இதனால் தொடர்ச்சியாக நடக்கும் மோசடி சம்பவங்களை குறைக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் டிஜிட்டல் பேங்கிங் முறைகளில் நம்பிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications