தொலைந்த பூனையை கண்டுபிடித்தால் ரூ. 10,000 பரிசு.. உறக்கமின்றி விளம்பரம் செய்து வரும் உரிமையாளர்!

செல்லப் பிராணிகளை வீட்டில் ஒருவராகவே பாவித்து வளர்க்கும் பல குடும்பங்கள் நம் நாட்டில் உள்ளது. சிலர் ரேஷன் கார்டுகளில் மட்டும் தான் தங்கள் வளர்ப்பு பிராணிகளின் பெயரை சேர்க்காமல் இருப்பார்கள். மற்றபடி அவற்றுக்கு பிடித்த உணவளிப்பது முதல் வசதியாக தூங்க இடம் அமைத்து தருவது வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் நபர்களும் உள்ளனர். அப்படித்தான் மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பழ வியாபாரி ஹுலோ என்ற பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்த பூனை சமீபத்தில் காணாமல் போயுள்ளது. ஹுலோவை பத்திரமாக மீட்டு தருபவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

பீர்நகரில் வசிக்கும் நிர்மல் பிஸ்வாஸ் என்ற நபர் ஹுலோ என்ற பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்த பூனை 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. அதிலிருந்து நிர்மலுக்கு சோகம் தாளவில்லை. ஹுலோவை தனது "செல்லமான குழந்தை" என்று வர்ணித்த நிர்மல், பீர்நகர் நகராட்சியின் சமர்ஜித் பள்ளி என்ற தனது பகுதி முழுவதும் ஒலிபெருக்கி மூலம் தனது செல்லப்பிராணியை கண்டுபிடித்து தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 தொலைந்த பூனையை கண்டுபிடித்தால் ரூ. 10,000 பரிசு.. உறக்கமின்றி விளம்பரம் செய்து வரும் உரிமையாளர்!

நிர்மல் ஹுலோவிடம் ஆழமான பந்தத்தை கொண்டிருந்துள்ளார். அதோடு ஹுலோ குழந்தையாக இருக்கும்போது நிர்மலின் தாயார் அவரிடம் இதை ஒப்படைத்துள்ளார். தனக்கு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்ட போதும் ஹுலோ தனக்கு துணையாக இருந்ததாகவும், தன் இளைய மகன் இறந்த பிறகு தனக்கு ஒரு மகனாகவே வளர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பூனைக்குட்டியை பற்றி விவரித்த நிர்மல், "ஹுலோவிற்கு தலைப்பகுதியில் கருப்பு புள்ளி இருக்கும். இது ஒரு ஆண் பூனை. யாரேனும் பூனையை கண்டால் தயவுசெய்து என்னிடம் அழைத்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி கடனாக நான் அவர்களுக்கு 10,000 ரூபாய் தருகிறேன். என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள்", என்று கூறியுள்ளார்.

ஹுலோவின் மறைவு நிர்மலை உறக்கமின்றி கலக்கமடையச் செய்துள்ளது. வீடு வீடாகச் சென்று ஹூலோவை தேட தொடங்கியுள்ளார். அதோடு ஒலிபெருக்கியின் மூலம் தெருக்களெல்லாம் பூனையை கொண்டு வந்து ஒப்படைக்கும் படி கூறியுள்ளார். கூரை வீட்டில் வசிக்கும் நிர்மல் ஹுலோவோடு சேர்த்து 8 பூனைகள், நாய்க்குட்டிகள் என பல்வேறு செல்லப் பிராணிகளை பராமரித்து வருகிறார். அவற்றை தனது குடும்பம் போல நடத்துகிறார். தன் செல்லப் பிராணிகளுக்கு உணவளிப்பதற்காகவே கொள்ளைபுறத்தில் உள்ள குளத்தில் மீன்களையும் வளர்த்து வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+