இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் கவலை அளிக்கும் விதமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று செய்திகளாவது மோசடி தொடர்பாக வெளி வருகின்றன. இதற்கு உதாரணமாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், கேப் முன்பதிவு செய்ய முயன்ற போது அதிநவீன ஆன்லைன் மோசடிக்கு இரையாகி ரூ.4.1 லட்சத்தை இழந்திருக்கிறார். மோசடி எப்படி நடந்தது? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
பாதிக்கப்பட்ட நபர் வாடகைக்கு கார் கிடைக்குமா என்று கூகுள் பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக "சக்தி கார் ரென்டல்ஸ்" என்று சொல்லப்படும் இணையதள முகவரியை கிளிக் செய்துள்ளார். வெளியான பிற அறிக்கைகளின் படி மோசடியாக கார் வாடகையை வழங்கும் இணையதளத்தில் பாதிக்கப்பட்ட நபர் வங்கி விவரங்களையும் வழங்கி இருக்கிறார். இதன் மூலம் கணக்குகளிலிருந்து அங்கீகரிக்கப்படாத வகையில் பணத்தை மோசடிக்காரர்கள் எடுத்துள்ளனர்.

போலி இணையதளம்: பாதிக்கப்பட்ட நபர் கார் வாடகை சேவைகளை ஆன்லைனில் தேடி இருக்கிறார். அப்போது சக்தி கார் ரென்டல்ஸ் என்ற இணையதளத்தை பார்த்து கிளிக் செய்துள்ளார். ரோகித் சர்மா என்ற பெயரில் நிறுவனத்தின் அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒரு நபர் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டுள்ளார். இணையதளத்தின் மூலமாக டோக்கன் தொகையாக 150 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த சொல்லி ரோகித் கூறியிருக்கிறார்.
பணம் செலுத்துவதற்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தி இருக்கிறார். அவர் பல முறை பணம் செலுத்த முயற்சித்த போதும் OTP சரிபார்ப்புக்குத் தேவையான எந்த ஒரு பாஸ்வேர்டும் அவருக்கு வரவில்லை. ஆனால் வங்கிகளில் இருந்து தனது பணம் டெபிட் செய்யப்பட்ட SMS அறிவிப்புகள் மட்டும் தொடர்ந்து வந்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டில் இருந்து ரூ.3.3 லட்சமும், கனரா பேங்க் டெபிட் கார்டில் இருந்து கூடுதலாக 80,956 ரூபாயும் எடுக்கப்பட்டது. ஆக மொத்தம் ரூ.4.1 லட்சம் ரூபாயை நொடி பொழுதில் பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து மோசடிக்காரர்கள் அபகரித்துள்ளனர்.
அதன் பிறகு பாதிக்கப்பட்டவர் உடுப்பி டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். அவருடைய புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட அமலாக்க அதிகாரிகள் மோசடிக்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணவும் மோசடி இணையதளம் எவ்வாறு கண்டறியப்படாமல் தப்பித்தது என்பதை கண்டுபிடிக்கவும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோசடியைப் புரிந்து கொள்வது: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மோசடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மோசடி செய்பவர்கள் தனிப்பட்ட விவரங்களை தெரிந்து கொண்டு அப்பாவி மக்களின் பணத்தை திருடுகின்றனர். எனவே கார்டு நம்பர், CVV நம்பர் போன்ற முக்கியமான தகவல்களை யாரிடமும் வழங்க வேண்டா. அதேபோல கூகுளில் தேடும்போது வரும் இணைதளங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை வழங்குவதற்கு முன்பு உண்மையிலேயே முறையான இணையதளமா? என்பதை ஒன்றுக்கு இரு முறை சரி பாருங்கள்.
இது போன்ற மோசடிகளுக்கு வழிவகுக்கும் போலி இணையதளங்களை கண்டறியும் வகையில் கூகுள் இந்த வருடத் தொடக்கத்தில் புதிய அல்காரிதத்தை உருவாக்கியது. குறிப்பாக மோசடி இணையதளங்களை கண்டறிவதற்காகவே பிரத்தியேகமாக இந்த அல்காரிதம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கண்டறியப்படும் இணையதளங்கள் விசாரணை குழுவை சென்றடைகிறது. அதை வைத்து கூகுள் இது போன்ற போலி இணையதளங்களை முடக்குகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இது போன்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவது கவலை அளிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications