உலகின் முக்கிய நகரங்கள் காற்று மாசுப்பாட்டில் மோசமான நிலையை எட்டியிருக்கும் வேளையில் பெங்களூரில் ஒரு நிருவனம் காற்றில் இருந்து சுத்தமான குடிநீர்-ஐ தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல் தற்போது இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் பெரும் புரட்சி செய்து வருகிறது.
இன்றைய வாழ்க்கை முறையில் மாசுப்படாத காற்று, மாசுப்படாத குடிநீர், ஆரோக்கியமான உணவு பொருட்கள் கிடைப்பது எந்த அளவுக்கு கடினம் என்பது பெரு நகரங்களில் இருப்பவர்களுக்கு தான் தெரியும். இதே பெரு நகரங்களில் தான் அளவுக்கு அதிகமான மக்களும் உள்ளனர்.

இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர்-ஐ சேர்ந்த Uravu Labs என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், காற்றில் இருக்கும் ஈரப்பதத்திலிருந்து புதுப்பிக்கத்தக்க குடிநீர்-ஐ உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல் கடந்த சில வருடத்தில் இதை பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முன்னாள் மாணவர்களான பர்தீப் கர்க், ஸ்வப்னில் ஸ்ரீவஸ்தவ், வெங்கடேஷ் ஆர் மற்றும் கோவிந்த பாலாஜி ஆகியோரால் 2019 இல் நிறுவப்பட்டது இந்த Uravu Labs, காற்றில் இருந்து உயர்தர குடிநீரை தயாரிக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் பயன்படுத்துகிறது.
இவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஹாஸ்டலில் ஒரு நாளுக்கு குளிக்க ஒரு பக்கெட் தண்ணீர் மட்டுமே அளிக்கப்பட்டது. இதில் வெறுத்துப்போன அவர்களுக்கு தோன்றிய யோசனை தான் இந்த Uravu Labs.

காற்றில் இருந்து குடிநீர்-ஐ உருவாக்கும் கான்செப்ட் பல வருடமாக இருந்தாலும், இதை சிறப்பாக உருவாக்கி கமர்சியல் சந்தைக்கு உருவாக்கிய Uravu Labs. இந்த பிரிவில் சுமார் 200க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அதிகப்படியான மின்சாரம் தேவைப்படுவதால், இதன் விலை அதிகமாக உள்ளது.
Uravu Labs 2019ல் துவங்கி முதல் ப்ரோடோடைப் மூலம் தினமும் 100 லிட்டர் சுத்தமான குடிநீர்-ஐ காற்றில் இருந்து உற்பத்தி செய்தது. தற்போது தினமும் 1000 லிட்டர் வரையிலான குடிநீர்-ஐ உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications