இந்தியாவின் டெக் நகரமான பெங்களூரில் அவ்வப்போது விநோதமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான், ஆனால் இந்த முறை அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. விதான் சௌதா பகுதியில் 1 கிலோமீட்டர் தொலைவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாப் செட் அப் மொத்தமாகத் திருடப்பட்டு உள்ளது. வடிவேலு கிணற்றைக் காணோம் எனச் சொல்வது போல் இங்குப் பஸ் ஸ்டாப் நிழற்கூடம் திருடப்பட்டு உள்ளது.
பெங்களூரில் நிறுவப்பட்ட பேருந்து நிழற்கூடம் ஒரு வாரத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள அதன் இரும்பு அமைப்புகள் உடன் மொத்தமாகத் திருடப்பட்டு உள்ளது. பெங்களூரின் முக்கியப் பகுதியான கன்னிங்ஹாம் சாலையில் அமைந்துள்ள பேருந்து நிழற்கூடம் பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தால் (BMTC) நிர்வகிக்கப்பட்டது.

பெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து நிழற்குடைகளைக் கட்டும் பொறுப்பில் உள்ள ஒரு நிறுவனத்தின் இணைத் துணைத் தலைவர் என் ரவி ரெட்டி, பேருந்து நிழற்குடை காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பிறகு செப்டம்பர் 30 அன்று புகார் அளித்ததை அடுத்து போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்தனர்.
போலீசார் தற்போது ஏன் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தாமதமாகப் புகார் கொடுக்கப்பட்டது என விசாரிக்கப்பட்டு வருவதாக டிசிபி சேகர் தெரிவித்துள்ளார். BMTC அமைப்பின் பஸ் ஸ்டாப் கட்டுமான பணிகளுக்குப் பொறுப்பாக ஒரு நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவர் தான் என் ரவி ரெட்டி, பஸ் ஸ்டாப் ஆகஸ்ட் 28 ஆம் தேதி காணாமல் போன நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தப் பஸ் ஸ்டாப் நிழற்கூடம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பஸ் ஸ்டாப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கட்டமைப்புகளால் கட்டப்பட்டது, எலக்ட்ரிக்கல் பணிகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் ஆகஸ்ட் 28 ஊழியர்கள் வந்து பார்த்த போது பஸ் ஸ்டாப் காணாமல் போனது தெரிய வந்தது.
இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் பெங்களூர் விதான சௌதா அமைந்திருக்கும் 1 கிலோமீட்டர் தொலைவில் தான் கன்னிங்ஹாம் சாலை பஸ் ஸ்டாப் திருடப்பட்ட சம்பவம் நடந்தது. தற்போது போலீசார் சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக மார்ச் மாதம், HRBR லேஅவுட்-ல் இருந்த 30 வருடங்களாக மக்களுக்குச் சேவை அளித்து வந்த பேருந்து நிலையம் ஒரே இரவில் காணாமல் போனது. கல்யாண் நகரில் உள்ள பேருந்து நிலையம் 1990 ஆம் ஆண்டு லயன்ஸ் கிளப்பினால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது, இது வணிக நிறுவனத்திற்கு ஏதுவாக வழி வகுக்கும் வகையில் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டிருந்தால், இதை ப்ருஹத் பெங்களூரு மகாநகரப் பாலிகே என்னும் BBMP தான் செய்திருக்கும் எனப் பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழக (BMTC) அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது BBMP நீக்கவில்லை என்பது உறுதியான பின்பே போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆய்வுப் பணிகளைத் துவங்கியுள்ளனர். பெங்களூரில் பஸ் ஸ்டாப் நிழற்கூடம் காணாமல் போகும் சம்பவம் இது முறையல்ல.
2015 ஆம் ஆண்டு ஹொரைசன் பள்ளி அருகே உள்ள தூப்பனஹள்ளி பேருந்து நிறுத்தம் இரவோடு இரவாக மாயமானது. முன்னதாக, 2014ல், ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள பிஇஎம்எல் லேஅவுட், III ஸ்டேஜில் 20 ஆண்டுகள் பழமையான பேருந்து நிறுத்தம் காணாமல் போனது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications