தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான வர்த்தக பகுதியாக உருவாகியிருக்கும் பெங்களூர்-ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க இரு மாநில அரசும் தீவிரமாக முயற்சி செய்து வரும் வேளையில் தற்போது புதிய பிரச்சனை உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே 5 இடங்களை தேர்வு செய்து, AAI அமைப்பு இறுதியாக 2 இடங்களை விமான நிலையத்தை அமைப்பதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வரும், தமிழ்நாடு விமான நிலையத்தை அமைக்கும் இடத்தை உறுதி செய்யும் என தெரிகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு பட்ஜெட் அறிவிக்கும் ஒரு நாளுக்கு முன்னதாக வியாழக்கிழமை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க 3 இடங்களை தேர்வு செய்து ஆய்வுக்காக சமர்ப்பித்துள்ளது. இதில் 2 இடங்கள் தற்போது ஓசூர் விமான நிலையம் அமைக்கும் பகுதிக்கு அருகில் உள்ளது.
கர்நாடக அரசு தேர்வு செய்துள்ள 3 இடத்தில் 2 இடங்கள் ஓசூர்-க்கு அருகில் கனகபுரா சாலையில் உள்ளது, இது பெங்களூர் மையப்புள்ளியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், தற்போது இருக்கும் கெம்பகவுடா விமான நிலையத்திற்கு 90 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் ஓசூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள 2 இடத்திற்கு வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இதுவே வான்வெளி அளவில் கணக்கிட்டால் 40 கிலோமிட்டருக்கும் குறைவாக இருக்கும்.

கர்நாடக அரசு தேர்வு செய்துள்ள 2 இடம் ஹரோஹள்ளிக்கு (Harohalli) பகுதியில் அமைந்துள்ளது, இந்த பகுதியை கிரீன் லைன் மெட்ரோ இணைப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த ஹரோஹள்ளி பகுதி கனகபுரா சாலையில் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் 4,800 ஏக்கர் மற்றும் 5,000 ஏக்கர் என இரண்டு நிலங்களை கர்நாடக அரசு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டு உள்ள இடம் தற்போது செயல்பாட்டில் இருக்கும் TAAL ஏரோடிரோம் அருகில் உள்ளது.


Click it and Unblock the Notifications