தென்னிந்தியாவின் விமான போக்குவரத்துத் துறைக்கு புதிய பரிமாண வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஓசூர், வடக்கு பெங்களூர், ஆந்திரா என பல இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு விமான நிலையம் எனில் அது ஓசூர் விமான நிலையம் தான்.
ஐடி நகரமான பெங்களூர் மற்றும் உற்பத்தி நகரமான ஓசூர் எல்லையில் அமைய உள்ள இப்புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி பாதை இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், இதற்கு போட்டியாக கர்நாடகா அரசு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கர்நாடகாவில் இரண்டாவது விமான நிலையம் உருவாக்கப்பட வேண்டும் என கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தாலும், பெரிய அளவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது முதல் கர்நாடகா 2வது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் தீவிரம் காட்ட துவங்கியது.
இந்த நிலையில் கர்நாடகா தொழிற்துறை அமைச்சர் எம்பி பாட்டில் நெலமங்கலத்தில் (Nelamangala) இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். நெலமங்கலத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், பெங்களூரு-மங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் 6,000 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது.
இந்த புதிய விமான நிலையம், தற்போதுள்ள பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை விட 1.5 மடங்கு பெரியதாக இருக்கும். இதேபோல் ஓசூரின் 2000 ஏக்கர் விமான நிலையத்தை ஒப்பிடுகையில் 3 மடங்கு பெரியதாக இருக்கும் என தெரிகிறது.
தமிழ்நாட்டில் புதிய விமான நிலையம்: தமிழ்நாடு அரசு, ஓசூரில் புதிய விமான நிலையத்தை சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. ஓசூரில் தற்போதுள்ள தனேஜா விமான நிலையம் அல்லது இதற்கு 2 கிலோமீட்டர் தெற்கில் இருந்து விமான நிலையம் அமைப்பதில் இறுதி முடிவை எடுக்க உள்ளது.
ஓசூர் விமான நிலையம் அமையவுள்ள இடம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தாலுகாக்களில் அமைந்துள்ளது. இதற்காக பெலகொண்டபள்ளி, கலுகொண்டபள்ளி, ஹோசபுரம், கோபனபள்ளி, முத்துகனபள்ளி, முகலூர், அச்செட்டிபள்ளி ஆகிய கிராமங்களில் இடத்தை கைகயகப்படுத்தப்படும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications