பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி தந்துள்ளது. இதனை அடுத்து பெங்களூருவில் மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும இடத்தில் சொத்துக்களின் மதிப்பு 30 சதவீதம் வரை உயரம் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அகர்வால் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்த மனோஜ் அகர்வால் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் பெங்களூருவில் மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி தந்துள்ளது. இந்த தகவல் வெளியான உடனேயே சொத்துக்களின் மதிப்பு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி அடுத்தடுத்த மாதங்களில் இது இன்னும் கூடுதலாக 20 சதவிகிதம் வரை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் எங்கெல்லாம் ரயில் நிலையங்கள் அமைகிறதோ அங்கே எல்லாம் அடுத்த ஒன்று முதல் மூன்று மாதங்களில் கணிசமான அளவு வீடு, நிலம் உள்ளிடவற்றின் விலை உயரும் எனக் கூறியுள்ளார். பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இந்த புதிய மெட்ரோ வழித்தடங்களில் உள்ள பகுதிகளில் நிலங்களை வாங்க போட்டி போடுவார்கள் என்றும் இதனால் அந்த பகுதியில் நிலங்களின் மதிப்பு உயர்வதோடு வீடுகளின் மதிப்பும் கணிசமான அளவு அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.
பொதுவாகவே மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு வெளியானாலேயே அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நிலத்தின் மதிப்பு, சொத்துக்களின் மதிப்பு உயர்வது இயல்புதான் என ப்ரோபர்ட்டி ஃபர்ஸ்ட் ரியாலிட்டி நிறுவனத்தின் தலைமை செய்த அதிகாரி பவேஷ் கோதாரி தெரிவிக்கிறார். பெங்களூருவில் தற்போது ஒப்புதல் பெறப்பட்டிருக்கும் இந்த மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில் பாதை என்பது நகரத்தின் தெற்கு பகுதிகளை இணைக்க கூடியதாக இருக்கும்.
புதிய மெட்ரோ ரயில் பாதைக்கு ஆரஞ்சு வழித்தடம் என பெயாிடப்பட்டுள்ளது. பெங்களூரு ஜே.பி.நகா் 4ஆவது பேஸ் பகுதியில் இருந்து மாகடி ரோட்டில் உள்ள கடபகெரே வரை ஒட்டுமொத்தமாக 44.65 கிலோ மீட்டருக்கு 3 ஆம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளது.
2 பிரிவுகளாக நடைபெறும் இந்த பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.15,611 கோடி ஒதுக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக ஜே.பி.நகா் 4ஆவது பேஸ் முதல் கெம்பபுரா வெளிவட்ட சாலை வழியாக மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இதன் மொத்த நீளம் 32.15 கிலோ மீட்டா் ஆகும். இதன் பின்னர் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்க உள்ளன.
ஏற்கனவே பெங்களூருவில் வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் விலை கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. தற்போது மெட்ரோ பணிகளும் தீவிரமடைந்துள்ளதால் ஒட்டுமொத்தமாகவே நகரம் முழுவதும் போக்குவரத்து எளிமையாகி சொத்துகளின் விலை இன்னும் உயரும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications