10 வருட விடா முயற்சி.. கூகுள் வேலையை தட்டி தூக்கிய பெங்களூர் அட்வின் ராய்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய இளைஞர்களுக்குத் தங்களின் ப்ரொபஷனல் வாழ்வில் மிக முக்கியமான இலக்காகக் கொண்டு இருப்பது வெளிநாட்டில் வேலை பார்ப்பது அல்லது பார்சூன் 500 நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும் என்பது தான்.

குறிப்பாக இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் அல்லாத கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்குப் பார்சூன் 500 நிறுவனத்தில் சேருவது என்பது மிகவும் கடினமான விஷயம், அப்படி 10 வருடப் போராட்டத்திற்குப் பின்பு பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது கனவு வேலையான கூகுள் நிறுவன பணியில் சேர்ந்துள்ளார்.

இவருடைய வீடியோ தற்போது இந்தியா முழவதும் டிரென்டாகியுள்ளது.

 நியூயார்க்-ல் புதிய சட்டம்.. உண்மை சொல்லும் அமேசான், கூகுள், ஜேபி மோர்கன், டெலாய்ட்..! நியூயார்க்-ல் புதிய சட்டம்.. உண்மை சொல்லும் அமேசான், கூகுள், ஜேபி மோர்கன், டெலாய்ட்..!

பார்சூன் 500

பார்சூன் 500

கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் ஒரு வேலைவாய்ப்புக்கு லட்ச கணக்கில் விண்ணப்பங்கள் குவியும், அதில் ஐஐடி முதல் சிறிய கல்லூரி பட்டதாரிகள் முதல், இளம் ஊழியர்கள் முதல் அதிக அனுபவம் கொண்ட ஊழியர்கள் வரையில் விண்ணப்பம் செய்யும் காரணத்தால் எப்போதுமே போட்டி கடுமையாக இருக்கும்.

அட்வின் ராய் நெட்டோ

அட்வின் ராய் நெட்டோ

இந்த நிலையில் அட்வின் ராய் நெட்டோ என்பவர் தனது கனவு நிறுவனமான கூகுளில் சுமார் 10 வருடம் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் கலந்து கொண்டு பல முறை தோவ்வி அடைத்தாலும் தொடர் முயற்சிக்குப் பின்பு தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

 மொபைல் மற்றும் வெப் அப்பிளிகேஷன்ஸ்

மொபைல் மற்றும் வெப் அப்பிளிகேஷன்ஸ்


அட்வின் ராய் நெட்டோ இவர் மொபைல் மற்றும் வெப் அப்பிளிகேஷன்ஸ்-ல் சுமார் 12 வருட அனுபவம் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் இருந்து கூகுள் நிறுவன பணிக்கு அப்ளை செய்து வரும் அட்வின் ராய் நெட்டோ கடைசியாகத் தனது கனவு வேலையை எட்டியிருந்தாலும், பல முறை இண்டர்வியூவ்-ல் தோல்வி அடைந்துள்ளார்.

UI UX designer இண்டர்வியூவ்

UI UX designer இண்டர்வியூவ்

2022 ஆம் ஆண்டின் கூகுள் நிறுவனத்தின் UI UX designer இண்டர்வியூவ்-ல் தேர்வான நிலையில் விரைவில் கூகுள் நிறுவனத்தின் டிசைன் டீம்-ல் சேர உள்ளார். இந்தச் செய்தியை அட்வின் ராய் தனது தாய் மற்றும் மனைவியிடம் பகிரும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 சமூகவலைத்தளம்

சமூகவலைத்தளம்

பொதுவாக நாம் சமூகவலைத்தளத்தில் பார்க்கக் கூடிய பதிவுகள் வெற்றிப் பெற்றது குறித்து அதிகமாக இருக்கும், ஆனால் உண்மையில் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, முயற்சிகளையே நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என அட்வின் ராய்த் தெரிவித்துள்ளார்.

10 வருட போராட்டம்

10 வருட போராட்டம்

மேலும் இந்த வீடியோ பதிவில் ஒவ்வொரு ஆண்டும் தான் UI UX designer பணிக்கு விண்ணப்பம் செய்து தோல்வி அடைந்த போது, அதில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு 10 வருட போராட்டத்திற்குப் பின்பு கூகுளில் வேலை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அட்வின் ராய்.

ரெஸ்யூம்

ரெஸ்யூம்

ஒவ்வொரு முறையும் ரெஸ்யூமில் தனது திறமைகள், போர்ட்போலிக்கள் போன்றவற்றை மாற்றி முயற்சிப்பேன், பிரபலமான டிசைன் கல்லூரியில் இருந்து நான் பட்டம் பெறவில்லை, ஆனால் திறமையை வளர்த்துக்கொண்டு என்னுடைய போர்ட்போலியோவை மேம்படுத்தினேன் என அட்வின் ராய்க் கூறியுள்ளார்.

 போட்டி

போட்டி

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் 70000 முதல் 1 லட்சம் விண்ணப்பங்களைப் பெறுகிறது, ஆனால் அதில் இருந்து வெறும் 144 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் வெற்றி அடைய வேண்டும் என்றால் கட்டாயம் உங்கள் திறமையை முழுமையாகக் காட்டும் வகையில் ரெஸ்யூம், போர்ட்போலியோ இருக்க வேண்டும் எனக் கூகுளில் பணியில் சேர விரும்புவோருக்குத் தான் கற்ற பாடத்தைக் கூறுகிறார்.

வீடியோ

இதோ நீங்க எதிர்பார்த்துக் காத்திருந்த வீடியோ.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bengaluru Advin Roy Netto got Product Designer job in Google; After 10 years of rejection

Bengaluru Advin Roy Netto got Product Designer job in Google; After 10 years of rejection
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X