இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூரின் சர்வதேச விமான நிலையமான கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி வரை 21 வருகை விமானங்களும் 21 புறப்பாடு விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிகம், இதில் ஒரு பகுதி வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள். மற்றொரு பகுதியினர் வேறு நாடுகளுக்கு செல்வதற்காக டிரான்சிட் பயணிகளும் துபாய்க்கு வருவது அதிகம். இதன் மூலம் தற்போது பல ஆயிரம் வெளிநாட்டு பயணிகள் விமான நிலையம் முடிங்கியதாலும், விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாலும் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
எந்த நாட்டுக்கான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது?
தற்போது பெங்களூரில் இருந்து ரத்து செய்யப்பட்ட விமானங்கள் அபுதாபி, ரியாத், ஜெத்தா, தம்மாம், துபாய், தோஹா ஆகிய நகரங்களை இணைக்கும் பாதைகளில் இயங்கும் விமான நிலையம். இந்த பாதைகள் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து மேற்கு ஆசியாவுக்கு செல்லும் மிக முக்கியமான சர்வதேச பயண பாதைகளாகும். இந்த பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளுக்கு என்ன செய்ய வேண்டும்?
விமான நிலைய நிர்வாகம் பயணிகளை தங்கள் தொடர்புடைய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு புதுப்பிக்கப்பட்ட அட்டவணை மற்றும் மேலும் தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது. விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த பதற்றம் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இது உலகளாவிய பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மேற்கு ஆசியாவுக்கு செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications