பெங்களூரு விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த இரண்டு வாடகை கார் சேவை நிறுவனங்களும் திடீரென மூடப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ப்ளூ ஸ்மார்ட் (BluSmart) மற்றும் ரீபக்ஸ் ஈவீல்ஸ் (Refex eVeelz) ஆகிய இரண்டு நிறுவனங்கள் தங்களுடைய மின்சார கார்கள் மூலம் வாடகை கார் சேவைகளை வழங்கி வந்தன. இந்த நிலையில் திடீரென இந்த இரண்டு நிறுவனங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டு இருப்பதால் பெங்களூரு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மீண்டும் அவர்கள் ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட டாக்ஸிகளை நாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ப்ளூஸ்மார்ட் டாக்ஸி நிறுவனம் முழுக்க முழுக்க மின்சார கார்களை கொண்டு வாடகை கார் சேவைகளை வழங்கி வந்தது. ஜென்சால் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது தான் ப்ளூ ஸ்மார்ட் டாக்ஸி நிறுவனம். சில தினங்களுக்கு முன்னர் ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பிரமோட்டர்கள் நிறுவனத்திற்காக வாங்கிய கடனை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செலவு செய்ததாக செபி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் பெங்களூரு, மும்பை, மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் வழங்கி வந்த வாடகை கார் சேவைகளை திடீரென நிறுத்திக் கொண்டது. அதேபோல ரீபக்ஸ் கிரீன் மொபிலிட்டி நிறுவனம் ரீபக்ஸ் ஈவீல்ஸ் என்ற பெயரில் பெங்களூரு விமான நிலையத்தில் மின்சார கார்களைக் கொண்டு வாடகை கார் சேவைகளை வழங்கி வந்தது ஆனால் திடீரென அந்த நிறுவனத்தின் சேவைகளும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
ரீபக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெங்களூரு விமான நிலையத்தில் மின்சார வாகனங்களைக் கொண்டு தங்கள் நிறுவனம் வழங்கி வந்த வாடகை கார் சேவைகளை நிறுத்தி வைப்பதாகவும், தங்களுடைய தொழிலை மறுக்கட்டமைப்பு செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இனி பல்வேறு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு வாடகை கார் சேவைகளை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவ்வாறு பெங்களூரு விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த இரண்டு வாடகை கார் சேவைகளும் திடீரென்று நிறுத்தப்பட்டு இருப்பதால் பயணிகள் ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்களை நாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஆண்டில் 41.88 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 11.6% அதிகம். இந்தியாவிலேயே அதிக பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களும் ஒன்றாக பெங்களூரு விமான நிலையம் இருந்து வருகிறது.
இந்த சூழலில் விமான நிலையத்திலிருந்து டாக்சி சேவைகளை வழங்கி வந்த இரண்டு நிறுவனங்களும் சேவையை நிறுத்தியுள்ளன. இதனால் பயணிகள் ஓலா , ஊபர் உள்ளிட்ட வாகனங்களை புக் செய்துவிட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக கவலை தெரிவிக்கின்றன. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஓலா, ஊபர், ப்ளூ ஸ்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கென பிரத்யேக பிக் கப் பாயிண்டுகள் இருக்கின்றன. ரேபிடோ, நம்ம யாத்திரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பிக் கப் பாயிண்டுகள் கிடையாது இதனால் பயணிகள் இவற்றில் வாகனங்களை புக் செய்தாலும் நீண்ட தூரம் நடந்து வந்து தான் அவற்றை அணுக முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications